செய்திகள் :

Operation Sindoor: ``வீழ்த்தப்பட்ட 6 பாகிஸ்தான் விமானங்கள்" - முதல்முறையாக பேசிய IAF தலைவர்

post image

இந்திய விமானப் படைத் (IAF) தலைவர் ஏ.பி சிங், ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணை அமைப்புகள் பாகிஸ்தானின் 5 போர் விமானங்களையும் ஒரு கண்காணிப்பு விமானத்தையும் வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளார்.

Operation Sindoor
Operation Sindoor

பாகிஸ்தானின் ராணுவ தளங்கள் சேதம்

பெங்களூரில் விமானப்படைத் தளபதி எல்.எம். கத்ரேவின் சொற்பொழிவில் பேசிய அவர், மே 10-ம் தேதி இந்தியா பாகிஸ்தானின் இராணுவத்தளங்களில் தாக்குதல் நடத்தியபோது ஜகோபாபாத் விமானப்படை தளத்தில் அமெரிக்க தயாரிப்பான F-16 விமானம் சேதமடைந்ததாகக் கூறியுள்ளார். அத்துடன் இரண்டு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் சேதமடைந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் 3 நாள் தாக்குதலில் பாகிஸ்தான் சமரசம் பேசும் நிலைக்கு வந்ததாகவும், அப்போது சேதமடைந்த விமானத்தளங்கள் இன்று வரை மீண்டும் பயன்பாட்டுக்கு வரவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

300 கி.மீ தொலைவிலிருந்து தாக்குதல்!

"இந்தியாவின் தாக்குதலில் குறைந்தபட்சம் 5 தேர்ந்த விமானப்படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் ஒரு பெரிய விமானமும் வீழ்த்தப்பட்டது அது ELINT விமானம் அல்லது AEW&C (வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு) விமானமாக இருக்கலாம். இந்த தாக்குதல்கள் 300 கி.மீ தொலைவிலிருந்து மேற்கொள்ளப்பட்டது. இதுவரை நடத்தப்பட்டதிலேயே மிகப் பெரிய தரையிலிருந்து வானில் தாக்குதல் நடத்திய நிகழ்வு இதுதான்." எனக் கூறியுள்ளார்.

S-400 missile system

ரஷ்யா வழங்கிய 'கேம் சேஞ்சர்'

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட ராணுவ ஆப்பரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ராணுவ தலைவர் பொதுவெளியில் பேசுவது இதுவே முதன்முறை.

அவரது உரையில் ரஷ்ய தயாரிப்பான S-400 ட்ரையம்ஃப் வான் பாதுகாப்பு அமைப்பை, 'கேம் சேஞ்சர்' என அழைத்துப் பாராட்டினார். சமீபமாக வாங்கப்பட்ட இந்த அமைப்பு பாகிஸ்தானின் விமானங்களை தொலைவிலேயே வைத்திருந்ததால் அவர்களால் நீண்ட தூர சறுக்கு குண்டுகளைப் பயன்படுத்த முடியாமல் போனதாகக் கூறியுள்ளார்.

மேலும் ஆப்பரேஷன் சிந்தூரின் போது இந்திய ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்படவில்லை என்ற எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டையும் மறுத்துள்ளார்.

`ஸ்டாலின் நடத்தியது மேஜிக் ஷோ, எடப்பாடியார் நடத்தியது ரியல் ஷோ' - சொல்கிறார் ஆர்.பி.உதயகுமார்

"ஸ்டாலின் நடத்திய ரோடு ஷோ மேஜிக் ஷோ, ஆனால், எடப்பாடியார் நடத்திய ரோடு ஷோ ரியல் ஷோ" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். ஆர்.பி.உதயகுமார்மதுரை கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்த... மேலும் பார்க்க

CM ஸ்டாலினையே திட்டுவீங்களா? - டென்ஷனான சேகர் பாபு; பின்வாங்காத தூய்மைப் பணியாளர்கள்! - Spot Report

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களின் மண்டலங்களை தனியார்மயப்படுத்தக் கூடாது என்பதும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுமே இவர்களின் கோரிக்கை. இ... மேலும் பார்க்க

Vijay-க்கு EPS தூது? பிரேக் போடும் Seeman! | Elangovan Explains

'மதுரை மாநாட்டில் மாஸ் காட்ட வேண்டும்' என திட்டமிட்டு செயல்படுகிறார் விஜய். இதற்கு பின்னணியில் மெகா கூட்டணி கணக்கு உள்ளது. முக்கியமாக 'எடப்பாடி மற்றும் பன்னீர்' இருவரின் மகன்களும் தனித்தனியே விஜய்-இடம... மேலும் பார்க்க

அரசுத்திட்ட விழா; அழைப்பு விடுக்காத இந்தியன் வங்கித் தலைவர் மீது உரிமை மீறல் தீர்மானம்

மதுரையில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் வழங்கும் விழாவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை அழைக்காத இந்தியன் வங்கித் தலைவர் மீது நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மான... மேலும் பார்க்க

'கெட்டப் பேராகுது; கலைஞ்சு போங்க!’ - கண்டிஷன் போடும் அமைச்சர் சேகர் பாபு? முறிந்த பேச்சுவார்த்தை

அப்செட்டாக மண்டலங்கள் 5 மற்றும் 6 யை தனியார்மயப்படுத்துவதை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 10 வது நாளை எட்டியிருக்கிற... மேலும் பார்க்க

"எம்.ஜி.ஆரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை!" - தொல்.திருமாவளவன் விளக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,"தம... மேலும் பார்க்க