செய்திகள் :

`Porn Addicts-ஆ?’ - `தி நியூயார்க் டைம்ஸ்' எதிராக பழங்குடியினர் - என்ன நடந்தது?

post image

பிரேசிலின் அமேசான் பகுதியைச் சேர்ந்தவர்கள் மருபோ பழங்குடியினர். இவர்கள் ஸ்டார்லிங்க் மூலம் ஒன்பது மாதங்களுக்கு முன்பு இணைய வசதியைப் பெற்றிருக்கின்றனர்.

இணைய வசதியைப் பெற்ற பழங்குடியினர்
இணைய வசதியைப் பெற்ற பழங்குடியினர்

இணையச் சேவையைப் பெற்ற பிறகு இவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்று   ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை கட்டுரை ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறது.

அதாவது “ மருபோ பழங்குடியினர் ஸ்டார்லிங்க் மூலம் இணைய வசதியைப்  பெற்ற ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, இளைஞர்கள் தொலைபேசிகளில் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள், வன்முறை வீடியோ கேம்களை விளையாடுகிறார்கள், சமூக ஊடகங்களை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள்.

மோசடிகள், தவறான தகவல்களைப் பார்க்கிறார்கள் மற்றும் சிறார்கள் ஆபாச வீடியோக்களை அதிக அளவுப் பார்க்கிறார்கள்” என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறது.

இதன் பிறகு ‘எலான்  மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணைப்பு ஒரு தொலைதூர பழங்குடியினரை ஆபாசத்திற்கு அடிமையாக்குகிறது’ என்ற தலைப்பில் செய்திகள் இணையத்தில் வைரலாகி இருக்கின்றன.

இணைய வசதியைப் பெற்ற பழங்குடியினர்
இணைய வசதியைப் பெற்ற பழங்குடியினர்

இது, அந்தப் பழங்குடிச் சமூகத்தினரைக் கவலையடையச் செய்திருக்கிறது. பழங்குடியினரின் இளைஞர்களைக் கேலி செய்வதாகவும், தங்களின் கலாசார மரபுகளைத் தவறாக சித்தரிப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி இருக்கின்றனர். 

இதனையடுத்து, இந்தச் செய்திகள் தங்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி, ’தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையின் மீது மருபோ பழங்குடியினர் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். மேலும் அவர்கள், 180 மில்லியன் டாலர் (அதாவது இந்திய மதிப்பின்படி ரூ. 1,500 கோடி) இழப்பீடு கோரி இருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

``அவன் மீண்டும் உயிர்வாழும் வாய்ப்பு இல்லாமலே போய்விடும்" - இறந்த மகனுக்காக நிதி திரட்டும் நடிகை!

ஆஸ்திரேலிய நடிகை, திரைப்படத் தயாரிப்பாளர் எனப் பல்வேறு துறைகளில் இயங்குபவர் கிளேர் மெக்கான் (Clare McCann). இவருக்கு 13 வயதில் அட்ரேயு என்ற மகன் இருந்தார். இவர் பள்ளிக்குச் சென்று வந்துகொண்டிருந்த நில... மேலும் பார்க்க

France: மனைவியால் தாக்கப்பட்ட பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன்? - வியட்நாமில் நடந்தது என்ன?

ஃபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனும் அவரது மனைவி பிரிஜிட் மக்ரோனும் விமானத்தில் இருந்து இறங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது. ஃபிரான்ஸ் ஜனாதிபதியும், அவரின் மனைவியும் வியாட்னாம் சுற்... மேலும் பார்க்க

China: மாதவிடாய் விடுப்புக் கேட்ட மாணவி; நிரூபிக்கச் சொன்ன பல்கலைக்கழகம் - பேசுபொருளான விவகாரம்

மாதவிடாய் காலத்தில் அசௌகரியம் நிலவுவதாக தெரிவித்து மருத்துவ விடுப்புக் கோரிய பெண்ணிடம், 'நீங்கள் சொல்வது உண்மை என்று நிரூபிக்க, பேன்ட்டை கழற்றி நிரூபிக்க வேண்டும்' என கட்டாயப்படுத்தியுள்ளது, பெய்ஜிங் ... மேலும் பார்க்க

பெங்களூரு: உபர் புக் செய்து காத்திருந்த ஐடி ஊழியர்... டிரைவராக வந்த `டீம் ஹெட்’ சொன்ன காரணம்

இந்தியாவின் தொழில்நுட்ப தலைநகரம் என அழைக்கப்படும் நகரம் பெங்களூரு. பொருளாதாரத் தேவை, லட்சியத்தை நோக்கியப் பயணம், அல்லது பொழுதுபோக்கு எனப் பல்வேறு காரணங்களுக்காக பெங்களூரில் பல இளைஞர்கள் ஒன்றுக்கும் மே... மேலும் பார்க்க

ANI: ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கும் யூடியூபர்களுக்கும் என்னப் பிரச்சனை? - YouTube என்ன சொல்கிறது?

இன்றைய சூழலில் YouTube என்றால் குழந்தைகூட பார்த்துக்கொண்டிருக்கும் சூழலில், அதற்கான கன்டென்ட் கிரியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. சிலர் தாங்களாகவே வீடியோவை உருவாக்கிப் பதிவிடுகின்றனர்.... மேலும் பார்க்க

ஒரு ஜோலா பையின் விலை 4,100 ரூபாய்! - எந்த நாட்டில் விற்கப்படுகிறது தெரியுமா?

நம் ஊரில் உள்ள அனைத்து மளிகைக் கடைகளிலும் நாம் ஜோலா பைகளைப் பார்த்திருப்போம். சிலர் வீடுகளிலும், இவற்றைப் பயன்படுத்துவதுண்டு. பீடிகம்பனி, சோப்பு கம்பனி, மசாலா கம்பனி போன்ற உள்ளூர் உற்பத்தி நிறுவனங்கள்... மேலும் பார்க்க