கிண்டி கிங் ஆய்வக மருந்து தர மேம்பாட்டுக்கு ரூ. 12 கோடி ஒதுக்கீடு
Seeman: “பெரியார் மீதான விமர்சனங்கள்; ஆதாரத்தை உரிய நேரத்தில் காட்டுவேன்" - சீமான் பதில்
கடந்த ஜனவரி 8 ஆம் தேதி கடலூரில் நடந்த ஒரு கட்சிக் கூட்டத்தின் முடிவில் பத்திரிகையாளர்களை சந்தித்த சீமான், பெரியாரின் பெண்ணியம் சார்ந்த கருத்துகள் குறித்து காட்டமாக பேசியிருந்தார்.
இந்தப் பேச்சு பெரியாரிய ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. சீமானும் தொடர்ச்சியாக ஒவ்வொரு பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் பெரியார் பற்றிக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். இதனைத் தொடர்ந்துதான் மே 17 இயக்கம் சார்பில் பெரியாரிய அமைப்புகள் ஒன்றிணைந்து சீமானின் வீடு இன்று (ஜன22) முற்றுகையிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டை பெரியாரிய ஆதரவாளர்கள் கூட்டமைப்பு சார்பில் முற்றுகையிட முயன்று கைதாகியிருக்கின்றனர். இந்த முற்றுகையை முன்னிட்டு சீமானின் வீட்டை சுற்றி நாம் தமிழர் தொண்டர்கள் உருட்டுக்கட்டையோடு நிற்கும் சம்பவமும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. மேலும் பெரியார் பற்றிய கடுமையான விமர்சனங்களுக்கு உரிய ஆதாரங்களை சீமான் காட்ட வேண்டும் என காட்டமாகப் பேசி வருகின்றனர் பெரியாரிய ஆதரவாளர்கள்.
இந்த முற்றுகைப் போராட்டம் குறித்துப் பேசியிருக்கும் சீமான், "ஆதாரத்தை உரிய நேரத்தில் காட்டுவேன். பெரியார் மீது நான் வைத்த விமர்சனத்தை இதற்கு முன்பு பலர் வைத்திருக்கின்றனர். அவர்கள் மீதெல்லாம் வழக்கு போடவில்லை. என் மீது மட்டும் வழக்குப் போட்டிருக்கிறார்கள். இந்த வழக்கை நான் நீதிமன்றத்தில் எதிர்கொள்வேன். நீதிமன்றத்தில் உரிய ஆதாரத்தைக் காட்டுவேன்.
பெரியாரை என்னைவிடவும் அதிகமாக விமர்சித்தது 'தி.மு.க'வினர்தான். 'இந்தி பள்ளிக்கூடத்தைத் திறந்தது இந்தப் பெரியார்தான். அந்த விழாவிற்கு நானும் போனேன் கருமம்" என்கிறார் திருவிக. இப்படி பலர் பெரியாரைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். நாங்கள் எதையும் ஆதரமில்லாமல் பேசவில்லை.
நான் பேசும் எல்லாவற்றிருக்கும் ஆதராம் கேட்பவர்கள், நான் பிரபாகரன் அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெட்டி ஒட்டியதாகச் சொல்கிறார்கள். அந்தப் புகைப்படம் போலியானது என்று நிரூபிக்க உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா?" என்று பேசியிருக்கிறார்.