செய்திகள் :

Virat Kohli : `இது அரசனுக்கு அழகில்லை' - 8 முறையும் ஒரே பாணியில் அவுட்டான கோலி!

post image
சிட்னி டெஸ்ட் முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்திய அணி இரண்டாம் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை எட்டியிருக்கிறது. மீண்டும் விராட் கோலி சோபிக்கவில்லை. வெறும் 6 ரன்களில் இந்த இன்னிங்ஸில் ஆட்டமிழந்திருக்கிறார். கோலி ரன் அடிக்கவில்லை என்பது ஏமாற்றம்தான். ஆனால், அதைவிட வருத்தமளிக்கக்கூடியது அவர் அவுட்டாகும் விதம்தான்.
கோலி
கோலி

சூர்யா நடித்த '24' படத்தில் ஒரு காட்சி வரும். காலத்தை கட்டுப்படுத்தும் சக்தியுடைய வாட்ச்சை ஒரு கிரிக்கெட் போட்டிக்கு அணிந்து செல்வார் சூர்யா. மேட்ச்சில் தோனி ஒரு பந்தை தூக்கியடிக்க அது பவுண்டரி லைனில் கேட்ச் ஆகும். அந்த சமயத்தில் சூர்யா தனது வாட்ச் மூலம் காலத்தை உறையச் செய்து, பீல்டரின் கையிலிருந்த அந்த பந்தை பவுண்டரி லைனுக்கு அப்பால் தூக்கி வைத்துவிடுவார். காலம் விடுபட்டவுடன் கேட்ச் ஆக வேண்டிய பந்து சிக்சராகியிருக்கும். கோலி ரசிகர்கள் கையில் அப்படி ஒரு வாட்ச் கிடைத்தால் ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்படும் பந்துகளுக்கு அவர் பேட்டை விடும் போது காலத்தை உறையச் செய்து அவரின் பேட்டை தூக்கி பந்தை லீவ் செய்ய வைத்துவிட்டு கூடவே, 'ஐயா...இனிமேல் இப்படி பேட்டை விட்டு அவுட் ஆகி ரசிகர்களின் இதயங்களை ரணப்படுத்தாதீர்கள்.' என கோரிக்கையும் வைத்துவிட்டு வருவார்கள். அந்தளவுக்கு கோலி அநியாயம் செய்திருக்கிறார்.

நடப்புத் தொடரில் கோலி 9 இன்னிங்ஸ்களில் பேட்டிங் ஆடியிருக்கிறார். அந்த 9 இன்னிங்ஸ்களில் 8 இன்னிங்ஸ்களில் விக்கெட்டை இழந்திருக்கிறார். 8 முறையும் ஒரே மாதிரியாக ஆப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளுக்கு பேட்டை விட்டு ஸ்லிப்பிலோ அல்லது விக்கெட் கீப்பரிடமோதான் கேட்ச் ஆகியிருக்கிறார். கோலியின் விக்கெட்டை வீழ்த்த ஆஸ்திரேலிய பௌலர்கள் பெரிதாக யோசிக்கவே இல்லை. ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசினால் கோலியே பேட்டை விட்டு அவுட் ஆவார் என்பதால் ரொம்பவே ஆசுவாசமாகத்தான் கோலியை எதிர்கொண்டனர்.

பெர்த்தில் முதல் இன்னிங்ஸில் ஹேசல்வுட்டுக்கு எதிராக அவுட் ஆனது தொடங்கி சிட்னியில் போலண்ட்டிடம் அவுட் ஆனது வரைக்கும் எந்த மாற்றமும் இல்லை. ஸ்கூல் யூனிபார்ம் போல எல்லாம் ஒரே டிசைன்.

கோலி
கோலி

ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசினாலே அவுட் ஆகிறோம் என்கிற பிரச்சனையே கோலியே ஒரு கட்டத்தில் கண்டுகொண்டும் விட்டார். போட்டி இல்லாத பயிற்சி சமயங்களில் வலையில் பந்துகளை அதிகமாக லீவ் செய்து பயிற்சி செய்தார். பீல்டில் நிற்கும் போதுமே கூட Shadow Practice இல் பந்துகளை லீவ் செய்வது போல் கற்பனை செய்து பார்த்துக் கொண்டிருந்தார். சச்சினின் சிட்னி 241* இன்னிங்ஸையும் கோலிக்கு பலரும் பரிந்துரை செய்தார். கோலியும் கட்டாயம் அதை ஒரு முன்னுதாரணமாக எடுத்திருந்திருப்பார். மெல்பர்ன் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 86 பந்துகளை எதிர்கொண்டு 36 ரன்களை எடுத்திருந்தார். அந்த இன்னிங்ஸில் தொடக்கத்தில் ஆப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற எக்கச்சக்கமான பந்துகளை லீவ் செய்திருந்தார். கோலியிடம் ஒரு கட்டுப்பாடு தெரிந்தது. ஆனால், அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. போலண்ட்டின் பந்தில் வழக்கம்போல எட்ஜ் வாங்கி கீப்பரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

சிட்னியின் முதல் இன்னிங்ஸில் ஆடுவதற்கு முன்பாக டெக்னிக்கலாக சில விஷயங்களை மாற்றி வந்திருந்தார். மிடில் & லெக் ஸ்டாண்ட்ஸில் கால்களை ஓப்பனாக மிட் விக்கெட்டை நோக்கி 'Front Foot' ஐ வைத்து ஆடிக்கொண்டிருந்த கோலி, சிட்னியில் மிடில் & லெக்கில் க்ளோஸாக வைத்து ஆடினார். இது ஆப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை திடகாத்திரமாக டிபன்ஸ் ஆட உதவும் என ஜாம்பவான்கள் கருத்து கூறினர். அந்த இன்னிங்ஸில் 69 பந்துகளை கோலி எதிர்கொண்டிருந்தார். ஆரம்பத்தில் கோலி வெளிக்காட்டிய கவனம் ஒரு கட்டத்திற்கு மேல் இல்லாமல் போனது. போலண்ட்டின் பந்தில் வழக்கம்போல எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் வெப்ஸ்டரிடம் கேட்ச் ஆனார்.

கோலி

தனக்கு என்ன பிரச்சனை இருக்கிறதென்பது கோலிக்குத் தெரிகிறது. அதைச் சரி செய்ய சில பிரயத்தனங்களையும் அவர் செய்கிறார். இருந்தும் அவரால் அவரது பலவீனத்திலிருந்து மீண்டு வர முடியவில்லை என்பதுதான் வேதனை.

பெர்த்தில் கோலி சதமடித்த போது ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு கடும் எச்சரிக்கை தொனிக்கும் வகையில் பேசியிருந்தனர். 'கோலி மாதிரியான ஒரு ஜாம்பவான் வீரரை முதல் போட்டியிலேயே சதமடிக்க விட்டிருக்கக்கூடாது. பாசிட்டிவ்வான மனநிலையோடு எஞ்சிய போட்டிகளை அணுகப்போகும் கோலி ரொம்பவே அபாயகரமான பேட்டராக இருப்பார்.' என மைக்கேல் க்ளார்க் பேசியிருந்தார். கோலியின் மீது அவ்வளவு பெரிய பிரமிப்பும் மிரட்சியும் அப்போது இருந்தது. ஆனால், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, அவரின் பலவீனம் என்னவென்பது எங்களுக்கு தெரியுமென ஆஸ்திரேலிய பௌலர்கள் சொல்லியடித்திருக்கின்றனர்.

கோலி

'அதோ பார்... அவர்தான் கிங் கோலி... உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்..' என மெல்பர்னில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த கோலியை ஒரு ஆஸ்திரேலிய தந்தை தன் குட்டி மகனுக்கு கதைபோல அறிமுகம் செய்து வைக்கும் வீடியோ இணையத்தில் பயங்கர வைரல்.

கோலி கிரிக்கெட் உலகம் கொண்டாடித் தீர்க்கும் மாபெரும் வீரன். ஒரு அரசனாகத்தான் அத்தனை பேர் மனதிலும் பதிந்து நிற்கிறார். உச்சத்திலேயே அவர் கதை முற்றுப்பெற வேண்டுமென்பதுதான் அனைவரின் விருப்பமும். மீண்டு வாருங்கள் கோலி!

Team India: ``சூப்பர் ஸ்டார் மனப்பான்மையிலிருந்து இந்திய அணி வெளிவர வேண்டும்" - ஹர்பஜன் சிங் ஆதங்கம்

ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பின்னர் தோல்வி முகமாக இருக்கிறது.குறிப்பாக, இலங்கையிடம் 27 ஆண்டுகளுக்குப்... மேலும் பார்க்க

`சாம்பியன்ஸ் டிராபியில் ஆப்கான் போட்டியை இங்கிலாந்து புறக்கணிக்க வேண்டும்' - ECB-க்கு வலியுறுத்தல்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (BCCI) இழுபறிக்குப் பின்னர், ஐ.சி.சி-யின் முடிவை ஏற்று அடுத்த மாதம் ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபி நடத்த ஒப்புக்கொண்டது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். பிப்ரவரி 19 தொ... மேலும் பார்க்க

Aus vs Ind: "இதே பயிற்சியாளர்கள் தொடர வேண்டுமா?" - கம்பீர் குழு நோக்கி கவாஸ்கர் அடுக்கும் கேள்விகள்

கடந்த ஆண்டு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்தபோது, ஜூன் மாதம் ஐ.சி.சி டி20 உலகக் கோப்பையை வென்றது இந்திய அணி. ஆனால், கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பற்ற பிறகு இந்திய அண... மேலும் பார்க்க

Karun Nair 2.0: `5 மேட்ச், 4 சதம், 542 ரன்கள்.. உலக சாதனை' - இந்திய அணியின் கதவை தட்டும் கருண் நாயர்

2016 டிசம்பரில் இந்தியா - இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில், சென்னையில் நடைபெற்ற 5-வது போட்டியில் நாட் அவுட் பேட்ஸ்மேனாக முச்சதம் அடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் கருண் நாயர். அந்த டெஸ... மேலும் பார்க்க

Virat Kohli: `பார்டர் கவாஸ்கர் தொடர்தான் கோலியின் கடைசி தொடரா..' - ஆஸி கேப்டன் கம்மின்ஸ் கூறியதென்ன?

சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியோடு இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் 2024-25 முடிவுக்கு வந்திருக்கிறது. சிட்னி டெஸ்டில் வென்றதன் மூலம் 3 - 1 என தொடரைக் கைப்பற்றிய ... மேலும் பார்க்க

Gambhir: ``எல்லோரும் உள்ளூர் கிரிக்கெட் ஆடவேண்டும்; இலையென்றால்..." - BGT தோல்விக்குப் பின் கம்பீர்

சொந்த மண்ணில் நியூசிலாந்துடன் முதல்முறையாக டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, தற்போது 9 ஆண்டுகளாகத் தன்வசம் இருந்த பார்டர் கவாஸ்கர் டிராபியை ஆஸ்திரேலியாவில் இழந்திருக்கிறது.முதல்முறையாக ஐந்து டெஸ்ட் போட்ட... மேலும் பார்க்க