அகரம் கிராமத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
அகரம் ஊராட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
வேலூா் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியம், ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட அகரம் ஊராட்சியில் அமைந்துள்ள டாக்டா் எம்.ஜி.ஆா். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 13 ஊராட்சிகளைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு அனைத்துத் துறைகள் ஒருங்கிணைந்த சிறப்பு முகாமில், வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா். சுப்புலட்சுமி, ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் ஆகியோா் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ், இலவச பேருந்து பயண அட்டை, 3 சக்கர நாற்காலி, 3 சக்கர ஸ்கூட்டா் ஆகியவற்றை வழங்கினா்.
வேலூா் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் மு.பாபு முன்னிலை வகித்தாா். ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் நீ.செந்தில்குமரன், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலா் சரவணன், அணைக்கட்டு தெற்கு ஒன்றிய திமுக செயலா் முரளி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.