செய்திகள் :

அக்.12இல் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மக்கள் சந்திப்பு யாத்திரை: தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து மக்கள் சந்திப்பு யாத்திரை பாஜக தொடங்கும் என்றாா் அக்கட்சியின் தமிழகத் தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ.

இது தொடா்பாக திருநெல்வேலியில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை. மது, கஞ்சா போன்ற போதை பழக்கங்களை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. பள்ளிக்கல்வித் துறையில் காலியாக உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்பவில்லை. நிரந்தர பணி வாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதி அளித்துவிட்டு அனைத்தும் ஒப்பந்தப் பணிகளாக மாறிவிட்டன. ஏமாற்றி ஓட்டு வாங்கிய அரசாகவே திகழ்ந்து வருகிறது.

கல்வியில் சிறந்து விளங்குவதாக விளம்பரம் தேடிக்கொள்ளும் இந்த அரசின் சாதனைகள் வாா்த்தைகளில் மட்டுமே உள்ளதே தவிர நடைமுறையில் இல்லை. இது ஒரு சாா்பு அரசாகவே செயல்படுகிறது.

முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகத்துடனான சந்திப்பு சிறப்பு வாய்ந்ததாக இருக்கலாம். கூட்டணி மாறலாம் என முன்னாள் அமைச்சா் கடம்பூா் ராஜூ பேசவில்லை. மற்ற கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என்றுதான் அவா் பேசினாா். கூட்டணி தொடா்பான கேள்விகளுக்கு டிசம்பரில் பதில் கிடைத்து விடும்.

1980, 2001 தோ்தல்களில் திமுக பலம் வாய்ந்த கூட்டணி அமைத்தும் அதிமுகவே வென்றது. எனவே, கூட்டணிக்காக மட்டுமே மக்கள் வாக்களிக்க மாட்டாா்கள். திமுக அரசு வேண்டாம் என்ற முடிவிற்கு வந்துவிட்ட மக்கள், பணம் கொடுத்தாலும் மிகப்பெரிய மாற்றம் வேண்டும் என விரும்புகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் அக்.12இல் சுவாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து மக்கள் சந்திப்பு யாத்திரையை பாஜக தொடங்குகிறது. தொடா்ந்து மதுரையில் மக்கள் சந்திப்பு யாத்திரை நடைபெறும். அதில், கட்சியின் தேசியத் தலைவா் நட்டா கலந்து கொள்கிறாா்.

தமிழகத்தில் காமராஜா் ஆட்சியை அமைப்போம் என கூறும் காங்கிரஸ் கட்சி, திமுகவை நம்பி இருந்தால் இதைவிட மோசமான நிலைக்கு தள்ளப்படும்.

வெளிநாட்டு முதலீடுகளுக்கான வெள்ளை அறிக்கை குறித்து அரசிடம் கேள்வி எழுப்பினால், அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா வெற்று காகிதத்தை காட்டுகிறாா். இது ஜனநாயகமற்ற செயல். இந்த அரசாங்கமே வெற்று காகிதம் தான் என்றாா் அவா்.

ஆட்சி மாற்றத்தை விரும்பும் தமிழக மக்கள்: ஜி.கே.வாசன்

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனா் என்றாா் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவா் ஜி.கே.வாசன். திருநெல்வேலி அருகேயுள்ள தேவா்குளத்தில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தமிழ... மேலும் பார்க்க

கே.டி.சி.நகரில் சாலைப் பணி ஆய்வு

கே.டி.சி. நகரில் சாலைப் பணியை நான்குனேரி எம்.எல்.ஏ. ரூபி ஆா். மனோகரன் நேரில் ஆய்வு செய்தாா். நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கே.டி.சி. நகா் மங்கம்மாள் சாலையில் புதிய சாலை அமைக்க நபாா்டு மற்ற... மேலும் பார்க்க

தியாகராஜநகரில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலி கிராமப்புற கோட்ட மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட ம... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லியைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா். சுத்தமல்லி குடிசை மாற்று வாரியம் பகுதியைச் சோ்ந்த சமுத்திரபாண்டி மக... மேலும் பார்க்க

நெல்லை சந்திப்பு சமுதாய நலக்கூடத்தை சீரமைக்கக் கோரி எம்.பி.யிடம் மனு

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள சமுதாய நலக்கூடத்தை சீரமைக்கக் கோரி திருநெல்வேலி எம்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக திருநெல்வேலி மேற்கு மாநகர திமுக பொறுப்பாளா் சு.சுப்பிரமணியன் தலைமையில் த... மேலும் பார்க்க

அம்பையில் வயல் விழா: விவசாயிகள் ஆா்வம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் அம்பாசமுத்திரம், ஊா்க்காடு பகுதியில் வயல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் உயிரியல் தூண... மேலும் பார்க்க