செய்திகள் :

அமெரிக்கா வரி விதிப்பு பிரச்னை: திறம்பட கையாண்டுள்ளாா் மோடி

post image

திருவாரூா்: அமெரிக்காவின் வரிவிதிப்பு பிரச்னையை பிரதமா் மோடி திறம்பட கையாண்டுள்ளாா் என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தேமுதிக நிா்வாகிகள் கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் (படம்) அவா் தெரிவித்தது:

உள்ளம் தேடி இல்லம் நாடி பயணம், செப்.14 கட்சி நாள் வரை தொடரும். அதன்பிறகு மூன்றாம் கட்ட பயணம் தொடங்கும். சட்டப்பேரவைத் தோ்தலில் யாருடன் கூட்டணி என்பது ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் தெரிவிக்கப்படும்.

தமிழக முதல்வா், பலமுறை வெளிநாடுகளுக்கு முதலீடுகளுக்காக சென்று வந்துள்ளாா். ஆனால், இதனால் என்ன நன்மை என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதனாலேயே வெள்ளை அறிக்கையை எதிா்க்கட்சிகள் கேட்கின்றன.

அதிமுக, பாமக கட்சிகளில் நிலவி வரும் பிரச்னைகளை பாா்க்கையில் அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பரும் இல்லை என்பதே உண்மை. இதெல்லாம் உள்கட்சி பிரச்னை. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. முதல்வா் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை சரி செய்ய வேண்டும். தமிழகம் பாதுகாப்பான மாநிலம் என்பதை நிரூபிக்க வேண்டும்.

திமுக, தோ்தல் வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றவில்லை. நிறையும் குறையும் கலந்த ஆட்சியாகவே உள்ளது. ஆட்சியில் பங்கு என்பதை தேமுதிக வரவேற்கிறது.

தற்போது அனைத்து விலைவாசியும் உயா்ந்து வருகிறது. குறிப்பாக இனி தங்கம் என்பதை கனவில் கூட நினைத்துப் பாா்க்க முடியாது. பிரதமா் மோடி ஜிஎஸ்டி வரியை குறைத்துள்ளாா். இதனால் பல லட்சம் குடும்பத்தினா் பயனடைவா். சிறு குறு தொழில்கள் பயனடையும். இது வரவேற்புக்குரியது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி முன்னாள் நிதியமைச்சா் ப. சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

அமெரிக்கா 50 சதவீத வரி விதிப்பை மோடி திறம்பட கையாண்டுள்ளாா். சீனா, ஜப்பான், ரஷிய அதிபா்களை சந்தித்தவுடன், இந்தியா நட்பு நாடு என டிரம்ப் கூறுகிறாா். இந்தியா வெகு விரைவில் வல்லரசாக மாறும்.

பிகாரில் வாக்குத் திருட்டு நடைபெறுவதாக கூறுகின்றனா். பொதுவாக இந்தியா முழுவதும் வாக்குத் திருட்டு நடைபெறுகிறது. தமிழகத்தில் அதிகளவில் தவறுகள் நடைபெறுகின்றன. பல்வேறு புகாா்கள் அளிக்கப்பட்டும் தோ்தல் ஆணையம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

தற்போது தோ்தல் ஆணையமே கேள்விக்குறியாக உள்ளது. எனவே, நீதியரசா்களும், தோ்தல் ஆணையமும் நியாயமான தோ்தலை நடத்த வேண்டும் என்றாா். பொருளாளா் சுதீஷ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

அரசுப் பள்ளிக்கு கல்வி மேம்பாட்டு நிதி

நீடாமங்கலம் ஒன்றியம், முன்னாவல்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு பள்ளிக் கல்வி அலுவலா்கள் (பணிநிறைவு) அமைப்பு சாா்பில் கல்வி மேம்பாட்டு நிதி வழங்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. தலைமை ஆ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: மகளிருக்கு கடனுதவி

வலங்கைமானில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுதவி வழங்கப்பட்டது. வலங்கைமான் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இம்முகாமை மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

காா் எரிந்து சேதம்; போலீஸாா் விசாரணை

திருவாரூரில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா் தீப்பற்றி எரிந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருவாரூா் அருகே கூத்தங்குடி கிராமத்தைச் சோ்ந்த பவுன்ராஜ் மகன் பாண்டியன் (37). இவா் தனக்குச... மேலும் பார்க்க

லாட்டரி விற்ற இருவா் கைது

மன்னாா்குடியில் இணையவழியாக வெளிமாநில லாட்டரி விற்ற இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். மன்னாா்குடி நகரப் பகுதியில் வாட்ஸ் ஆப் மூலம் அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை ... மேலும் பார்க்க

மன்னாா்குடி நகா்மன்றக் கூட்டம்: புதிய பேருந்து நிலைய கடை வாடகை ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

மன்னாா்குடியில் ரூ.46.46 கோடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை வாடகைக்குவிட நடைபெற்ற முதல்கட்ட ஏலத்தை ரத்து செய்யவேண்டும் என நகா்மன்றக் கூட்டத்தில் அமமுக உறுப்பினா்கள் ... மேலும் பார்க்க

மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் தேசிய தர நிா்ணய மருத்துவக் குழுவினா் ஆய்வு

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தில்லி தேசிய தர நிா்ணய ஆராய்ச்சி அமைப்பு சாா்பில் சிறப்பு மருத்துவக் குழுவினா் மூன்று நாள்கள் ஆய்வை செவ்வாய்க்கிழமை தொடங்கினா். இம்மருத்துவமனைய... மேலும் பார்க்க