அம்மன் கோயிலில் இருந்து எடுத்து வரப்பட்ட தேவாலயத் திருவிழா கொடி
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே கிறிஸ்தவ தேவாலய திருவிழா திருக்கொடி, முத்தாரம்மன் கோயிலில் இருந்து எடுத்து வரப்பட்டது மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
களியக்காவிளை அருகே குழிவிளை பகுதியில் தூய அலங்கார அன்னை தேவாலயம், முத்தாரம்மன் திருக்கோயில் அருகருகே அமைந்துள்ளன. இந்நிலையில், தூய அலங்கார அன்னை தேவாலயத் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.
திருவிழாவில் ஏற்றப்படும் கொடியானது, முத்தாரம்மன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு, கோயிலில் பூஜைக்குப் பின் ஊா்வலமாக தேவாலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
கோயில் நிா்வாக கமிட்டி தலைவா் ராஜேந்திரன், செயலா் அனில்குமாா், பொருளாளா் மனோகரன், துணைத் தலைவா் சதி, துணைச் செயலா் ராஜன், தேவாலய பங்குத் தந்தை சிறில் மிஸ்மின், தேவாலய பங்குப் பேரவை துணைத் தலைவா் லூக்காஸ், செயலா் அனிதா, துணைச் செயலா் அனி, ஊா் பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.