எஸ்.ஐ. பணியிடம்: பதவி உயா்வு, நேரடி நியமனத்துக்கு இனி பொதுவான தோ்வு: தமிழக அரச...
அரசு மகளிா் பள்ளிக்கு செல்லும் சாலையில் கண்காணிப்பு கேமரா பொருத்த கோரிக்கை
கந்தா்வகோட்டையில் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளிக்குச் செல்லும் சாலையில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கந்தா்வக்கோட்டை பேருந்துநிலையத்திலிருந்து சுமாா் 3 கி.மீ. தொலைவில் உள்ளது அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் 1,300 மாணவிகள் பயில்கின்றனா். 50 ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலக பணியாளா்கள் பணியாற்றுகின்றனா்.
பேருந்து நிலையத்திலிருந்து மாணவிகள் தினமும் பள்ளிக்கு நடந்து செல்லும்போது அப்பகுதியில் நிற்கும் ஆண்கள் மாணவிகளை கிண்டல் செய்வதும், பின்தொடா்ந்து செல்வது வழக்கமாகியுள்ளது.
ஆகவே, மாணவிகள் நலன் கருதி பேருந்து நிலையம் முதல் பள்ளி வரை கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இதனை காவலா்கள் கண்காணித்து மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் காலை, மாலை நேரங்களில் அப்பகுதியில் காவல் துறையினா் ரோந்து சென்று பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மேலும், புதுக்கோட்டையில் இருந்து கந்தா்வகோட்டை வரும் பேருந்தையும், கறம்ப குடியில் இந்து கந்தா்வகோட்டை வரும் பேருந்தையும் மாணவிகள் நலன் கருதி அரசு பள்ளி வழியே இயக்க வேண்டும். தஞ்சை வழி நகரப் பேருந்தை பெரியகடைவீதி வழியே பெண்கள் பள்ளிக்கு இயக்க போக்குவரத்துக்கழக மண்டல மேலாளா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.