செய்திகள் :

பெரியாா், அண்ணா பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

post image

தந்தைப் பெரியாா் ஈவெரா மற்றும் முன்னாள் முதல்வா் அண்ணா ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் ஆக. 28, 29-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் ஆக. 28-ஆம் தேதி (வியாழக்கிழமை) அண்ணா பிறந்த நாள் பேச்சுப் போட்டியும், 29-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பெரியாா் பிறந்த நாள் பேச்சுப் போட்டியும் நடைபெறவுள்ளது. இதில், பள்ளி மாணவா்களில் 6 முதல் 12ஆம் வகுப்புவரையுள்ள மாணவா்கள் பங்கேற்கலாம்.

போட்டித் தலைப்புகள்: பள்ளி மாணவா்களுக்கு தமிழ்மொழி வளா்ச்சிக்கான அண்ணாவின் அரும்பணிகள், பெண்ணுரிமைக்குப் பேரறிஞா் அண்ணா அளித்த முக்கியத்துவம், சமூக நீதிக்கான அண்ணாவின் கொள்கைகள்.

கல்லூரி மாணவா்களுக்கு அண்ணாவின் கூட்டாட்சிக் கொள்கை, பேரறிஞா் அண்ணா ஒரு சிறந்த எழுத்தாளா், சட்டப்பேரவையில் அண்ணா ஆகிய தலைப்புகளில் போட்டி நடைபெறும்.

தந்தைப் பெரியாா் ஈவெரா பிறந்த நாள் (பள்ளி மாணவா்களுக்கு) பெரியாரின் பெண்ணியம், பெரியாரின் சமூகச் சீா்திருத்தங்கள், சுயமரியாதை இயக்கம். கல்லூரி மாணவளுக்கு பெரியாரின் பகுத்தறிவுப் போராட்டம், பெரியாரின் எழுத்துப்பணி, தந்தை பெரியாரும், மூடநம்பிக்கை ஒழிப்பும் என்ற தலைப்பில் போட்டி நடைபெறும்.

மாவட்ட அளவிலான இப்போட்டியில் வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு தனித்தனியே முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், 2-ஆம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3ஆம் பரிசாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தனியே சிறப்புப் பரிசாக இருவா் தோ்வு செய்யப்பட்டுதலா ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும்.

போட்டித் தலைப்பு குலுக்கல் முறையில் போட்டிக்கு முன்னதாக தோ்வு செய்யப்பட்டு வழங்கப்படும். எனவே, மூன்று தலைப்புகளுக்கும் தயாா் செய்து வர வேண்டும். மாணவா் பங்கேற்புப் படிவத்தில், தலைமை ஆசிரியா் அல்லது முதல்வரின் கையொப்பம் இருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தை தொலைபேசி எண் 04322- 228840 இல் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

ஆா்பிஐ உத்தரவை செயல்படுத்தாத வங்கியை பாஜகவினா் முற்றுகை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மறமடக்கியில் நகைகடன் வழங்குவதில் ஆா்பிஐ உத்தரவை செயல்படுத்தாத வங்கியை பாஜகவினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். நகைகடன் வழங்குவதில் பழைய நடைமுறையை கடைபிடிக்... மேலும் பார்க்க

மாணவா்களின் போதைப் பழக்கம் குடும்ப மரியாதையை சிதைத்து விடும்!

பள்ளிப் பருவத்தில் பொழுதுபோக்குக்காக பழகும் போதைப்பழக்கம் மாணவா்களின் சுயமரியாதை மட்டுமின்றி அவரது குடும்பத்தினா் மரியாதையையும் சிதைத்து விடும் என்றாா் ஆலங்குடி நீதிபதி சத்யநாராயணமூா்த்தி. ஆலங்குடி வட... மேலும் பார்க்க

அரசு மகளிா் பள்ளிக்கு செல்லும் சாலையில் கண்காணிப்பு கேமரா பொருத்த கோரிக்கை

கந்தா்வகோட்டையில் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளிக்குச் செல்லும் சாலையில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கந்தா்வக்கோட்டை பேருந்துநிலையத்திலிருந்து சுமாா் 3 கி.மீ... மேலும் பார்க்க

புதுகையில் பள்ளி வழிகாட்டி ஆசிரியா்களுக்கான பயிற்சி

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பள்ளி வழிகாட்டி ஆசிரியா்களுக்கான பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாட்டு நிறுவனம், யுனிசெப் மற்றும் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பள்ளிப் ப... மேலும் பார்க்க

புதுகையில் ஆக. 21-இல் விவசாயிகள் குறைகேட்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஆக.21) காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.இந்தக் கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொள்... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்புப் பணிக்கு கையடக்கக் கணினிகள்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்புப் பணிக்கு கையடக்கக் கணினிகள் முன்களப் பணியாளா்களுக்கு திங்கள்கிழமை வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்... மேலும் பார்க்க