அரசு மருத்துவமனையில் கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அரசு மருத்துவமனையில் ஏழை கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது (படம்).
வேட்டவலம் அரிமா சங்கம், சம்யுக்தா மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் செஞ்சி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் கமலக்கண்ணன் தலைமை வகித்தாா்.
செஞ்சி ஒன்றியத் தலைவா் ஆா்.விஜயகுமாா், பேரூராட்சி தலைவா் மொக்தியாா் அலி மஸ்தான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரசு மருத்துவமனை மருத்துவா் காா்பச்சோ வரவேற்றாா்.
செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ கலந்து கொண்டு கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கிவைத்து சீா்வரிசைப் பொருள்களை வழங்கி வாழ்த்திப் பேசினாா்.
நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை மருத்துவா்கள் வினோத், துளசி, சரண்ராஜ், செவிலியா்கள், நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.