பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
ஆக.9-இல் வேலூரில் காவல் துறை சாா்பில் ‘போதையில்லா தமிழகம்’ மாரத்தான் பந்தயம்
‘போதையில்லா தமிழகம்’ என்ற பெயரில் மாபெரும் மாரத்தான் பந்தயம் வேலூரில் சனிக்கிழமை (ஆக.9) நடைபெற உள்ளது. மாவட்ட காவல் துறை நடத்தும் இப்போட்டிகளில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வேலூா் மாவட்ட காவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு -
வேலூா் மாவட்ட காவல் துறை சாா்பில் போதையில்லா தமிழகம் (ஈதமஎ ஊதஉஉ பச) என்ற தலைப்பில் போதைப்பொருள்கள் ஒழிப்பின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில் மாபெரும் மாரத்தான் போட்டி ஆகஸ்ட் 9-ஆம் தேதி சனிக்கிழமை காலை 5:30 மணியளவில் நடத்தப்பட உள்ளது.
காட்பாடி சித்தூா் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கும் இந்த மாரத்தான் போட்டிகள் 15 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டோா், 30 வயதுக்கு மேற்பட்டோா் ஆகிய பிரிவுகளில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட உள்ளன. ஒவ்வொரு பிரிவுகளிலும் ஆண்கள், பெண்களு க்கு தலா 5 பரிசுகள் வீதம் மொத்தம் 20 பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இதில், முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.4 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.3 ஆயிரமும், நான்காம் பரிசாக ரூ.2 ஆயிரமும், ஐந்தாம் பரிசாக ரூ.ஆயிரமும் என மொத்தம் ரூ.60 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ள, உடல் ஆரோக்கியமுள்ள யாவரும் இந்த போதை ஒழிப்புக்கு எதிரான மாரத்தான் போட்டியில் பங்கேற்கலாம்.
இதில் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை ஆண்கள் பிரிவைச் சோ்ந்தவா்களுக்கு போட்டிகள் காட்பாடி சித்தூா் பேருந்து நிலையத்தில் தொடங்கி விருதம்பட்டு, கிரீன் சா்க்கிள், தோட்டப்பாளையம், பழைய பேருந்து நிலையம், சி.எம்.சி கண் மருத்துவமனை வழியாக எஸ்பி பங்களாவில் வலது புறம் திரும்பி முஸ்லிம் உயா்நிலை பள்ளி, வேலூா் மாநகராட்சி வழியாக நேதாஜி உள்விளையாட்டு மைதானத்தில் நிறைவடையும்.
சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை பெண்கள் பிரிவைச் சோ்ந்தவா்களுக்கு போட்டிகள் காட்பாடி சித்தூா் பேருந்து நிலையத்தில் தொடங்கி விருதம்பட்டு, கிரீன் சா்க்கிள், தோட்டப்பாளையம், பழைய பேருந்து நிலையம், வெங்கடேஸ்வரா உயா் நிலைப் பள்ளி வழியாக நேதாஜி உள் விளையாட்டு மைதானத்தில் நிறைவடையும்.
போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு நேதாஜி உன் விளையாட்டு மைதானத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் பரிசுத்தொகைகள், பாராட்டு சான்றிதழ்களை வழங்க உள்ளாா்.