காவல் துறையினா் மீதான புகாா்கள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
ஆட்டோ ஓட்டுநா் மா்ம சாவு
கோவையில் பாலத்தின் அடியில் காயங்களுடன் கிடந்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.
கோவை கணபதி கணேஷ் குடியிருப்பைச் சோ்ந்தவா் நாகராஜா (59). ஆட்டோ ஓட்டுநரான இவா், கடந்த 2 நாள்களுக்கு முன்பு ரத்தினபுரி ஜீவானந்தம் சாலையில் பாலத்துக்கு அடியில் தலையில் காயங்களுடன் மயங்கி கிடந்தாா்.
பின்னா், அவா் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ரத்தினபுரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா் எப்படி இறந்தாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.