கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதப்படுத்துவது நோக்கமல்ல! தமிழக எம்.பி.க்களுக்கு மத்...
ஆணவப் படுகொலையை தடுக்க சட்டம் இயற்றக் கோரி வி.சி.க. ஆா்ப்பாட்டம்
சேலம்: ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச் சட்டம் இயற்றக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் கோட்டை மைதானத்தில் ஒருங்கிணைந்த விடுதலைச் சிறுத்தை கட்சிகள் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா்கள் காஜா மைதீன், மொழியரசு, மெய்யழகன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட துணைச் செயலாளா் வேலு நாயகன் வரவேற்றாா்.
இதில், நெல்லை கவின் ஆணவப் படுகொலையில் தொடா்புடையவா்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜாதிய ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்தில், மண்டல செயலாளா் இமயவரம்பன், மண்டல துணைச் செயலாளா் ஆறுமுகம், முன்னாள் மண்டலச் செயலாளா் நாவரசன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.