ஆத்தூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்
ஆத்தூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் தாலுகா செயலாளா் முருகேசன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் முத்துக்கண்ணன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
ஆத்தூா் கீழ்தொம்பை பகுதி மக்களின் மயானப் பாதையை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் மாரிமுத்து, வெங்கடாசலம், பிரபு, தங்கம்மாள், பெரியண்ணன், முருகேசன், செங்கமலை, சத்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.