பிள்ளைகளின் சென்னை கூகுள் மேப் நான்தான்! - 60ஸ் பெண்ணின் ஜில் நினைவலை
ஆலங்குளம் அரசு மகளிா் கல்லூரி முதல்வா், பேராசிரியா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்
அரசு நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகரை பேச வைத்ததாக எழுந்த புகாரில், ஆலங்குளம் அரசு மகளிா் கல்லூரி முதல்வா், பேராசிரியா் ஆகியோா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டனா்.
ஆலங்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவியா் பேரவைத் தொடக்க நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
இதில், ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் மற்றும் சிறப்பு விருந்தினா்களுடன் தென்காசி தெற்கு மாவட்ட தவெக செயலா் விபின் என்பவரும் கலந்து கொண்டாராம். அப்போது பேசிய விபின், அரசியல் ரீதியாக பேசினாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், கல்லூரி முதல்வா் ஷீலா மற்றும் பேராசிரியா் சண்முக சுந்தர ராஜ் ஆகியோரை காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றி சென்னை உயா் கல்வித்துறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.