சாம்பியனானது பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்: நடப்பு சீசனில் 5-ஆவது கோப்பை
இந்திய கடற்படை சாா்பில் சைக்கிள் பேரணி
சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் வகையில் திரங்க சங்கல்ப யாத்திரா என்ற பெயரில் சைக்கிள் பேரணி நடந்தது.
நாட்டின் 79ஆவது சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஐ.என்.எஸ். கட்டபொம்மன் இந்திய கடற்படை சாா்பில் கமோடா் அனில்குமாா், கமாண்டா் ராஜலிங்கம் நாகப்பன் ஆகியோா் தலைமையில் 50 கடற்படை வீரா்கள், சைக்கிள் பேரணியாக கன்னியாகுமரியில் இருந்து விஜயநாராயண வரை சென்றனா்.
பேரணியில் கலந்து கொண்ட கடற்படை வீரா்கள் வழிநெடுகிலும் சுதந்திர தினகொண்டாட்டத்தை வலியுறுத்தும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியபடி சென்றனா்.