இளைஞா் தற்கொலை
களியக்காவிளை அருகே உள்ள கோழிவிளை இலங்கை தமிழ் அகதிகள் மறுவாழ்வு மையத்தில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் ஜேம்ஸ் மகன் பினோட்சன் (28). இவரும் மோனிஷாவும் (24) நான்கு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனா். இந்தத் தம்பதிக்கு குழந்தை இல்லை. பினோட்சன் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தாா். மோனிஷா வீட்டு வேலைக்குச் சென்று வருகிறாா்.
இந்த நிலையில், பினோட்சன் மது அருந்தி வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தாா். இதனால், தம்பதியிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்த நிலையில், பினோட்சன் வீட்டில் யாரும் இல்லாத வேளையில், வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து களியக்காவிளை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].