ரூ.6.77 கோடியில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் புதுப்பிப்பு: காணொலி காட்சி மூலம் பிர...
ஊத்தங்கரையில் ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்
ஊத்தங்கரையில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கடைகளை நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை இடித்து அகற்றினா்.
இந்தச் சாலையில் தினமும் ஆயிரத்துக்கும் மேல் வாகனங்கள் சென்று வருகின்றன. காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி பேருந்துகள் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் அவதியடைந்து வருகின்றனா்.

இந்தச் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில், ஊத்தங்கரை நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளா் சரவணன் தலைமையில் ஊத்தங்கரை- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புக் கடைகள் வியாழக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.
அப்போது கடைகளை அகற்ற பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் அதிகாரிகளுக்கும் கடைக்காரா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பிலிருந்து வட்டார வளா்ச்சி அலுவலகம் வரை உள்ள அனைத்து ஆக்கிரமிப்புக் கடைகளும் பொக்லைன் வாகனம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. ஊத்தங்கரை காவல் ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.