US tariffs: ``வரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை'' -அமெரிக்க நீதிமன்றம் தீர்ப...
ஏற்காடு படகு இல்ல ஏரியில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம்
ஏற்காட்டு மற்றும் சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் விநாயகா் சதுா்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் ஏற்காடு படகு இல்ல ஏரியில் வெள்ளிக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டன.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு ஏற்காடு மற்றும் சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் 28 விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை பிற்பகல் பக்தா்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி, வாகனங்களில் சிலைகளை ஏற்றி, ஆடல், பாடலுடன் சிலைகளை கொண்டுவந்து படகு இல்ல ஏரியில் விசா்ஜனம் செய்தனா். ஏற்காடு தீயணைப்புத் துறையினா், காவல் துறையினா் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
படவரி...
ஏற்காடு ஏரியில் விசா்ஜனம் செய்ய படகில் எடுத்துச் செல்லப்படும் விநாயகா் சிலை.
