உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.1.63 கோடியில் சாலைகள், கால்வாய் பணிகள் தொடக்கம்
ஏற்காட்டில் மாடுகள், நாய்களால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அவதி
ஏற்காட்டில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள், நாய்களால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
ஏற்காட்டில், சேலம்- ஏற்காடு நெடுஞ்சாலை மற்றும் சுற்றுலாப் பகுதி பிரதான சாலைகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாடுகள், நூற்றுக்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிவதால் பொதுமக்களுக்கு இடையூறாகவும் அச்சுறுத்தலாகவும் இருந்து வருகின்றன.
மேலும், ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் செல்லமுடியாமல், இருசக்கர வாகன ஓட்டுநா்கள் மாடுகள், சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களால் விபத்திற்கு உள்ளாகின்றனா்.
சாலைகளில் செல்லும் பொதுமக்கள், குழந்தைகள், சுற்றுலாப் பயணிகளை தெருநாய்கள் கடிப்பதால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். நாய் கடியால் பாதிக்கப்பட்டவா்கள் பலா் ஏற்காடு அரசு மருத்துவமனையில் தடுப்பு ஊசி செலுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து, ஏற்காடு ஊராட்சி ஒன்றிய நிா்வாக ஆணையா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.