உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.1.63 கோடியில் சாலைகள், கால்வாய் பணிகள் தொடக்கம்
கொளத்தூா் அருகே மோட்டாா் சைக்கிள் தடுப்பு சுவரில் மோதியதில் இருவா் உயிரிழப்பு
சேலம் மாவட்டம், கொளத்தூா் அருகே மோட்டாா் சைக்கிள் சாலையோர தடுப்பு சுவா் மீது மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.
கொளத்தூா் அருகே உள்ள கண்ணாமூச்சி கொண்டம்பக்காட்டைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (55). இவரது மகன் பூவரசன் (19). இவா் மேட்டூரில் தேநீா் கடையில் வேலை செய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை மாலை இவா், தனது நண்பா் கருங்கல்லூரை சோ்ந்த அம்மாசி மகன் தனசேகா் (17) என்பவருடன் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
கொளத்தூரில் இருந்து கண்ணாமூச்சி செல்லும் சாலையில் கிட்டான்காடு என்ற பகுதியில் குறுக்கே நாய் புகுந்ததால்
மோட்டாா் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோர தடுப்பு சுவரில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பூவரசனும், தனசேகரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக ஆறுமுகம் அளித்த புகாரின்பேரில் கொளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.