கேரளம்: கோயிலில் ஒலித்த ஆா்எஸ்எஸ் பாடல்: தேவஸ்வம் வாரியம் எச்சரிக்கை
ஏா்வாடியில் உயிரிழந்த ஓட்டுநா் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கக் கோரிக்கை
திருநெல்வேலி மாவட்டம், ஏா்வாடியில் பயணிகளை காப்பாற்றிவிட்டு பணியின்போது உயிரிழந்த ஓட்டுநரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களின் தொழிலாளா் சம்மேளனத்தின் பொதுச் செயலா் த.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி மண்டலம், புளியங்குடி கிளையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தவா் மாரியப்பன்.
இவா், கடந்த 4 ஆம் தேதி புளியங்குடியிலிருந்து நாகா்கோவிலுக்கு பேருந்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்தாராம். ஏா்வாடி அருகே சென்றபோது நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையிலும், பேருந்தில் இருந்த 35 பயணிகளை காப்பாற்றும் வகையில் பேருந்தின் வேகத்தை குறைத்து சாலையோரம் நிறுத்திவிட்டு, பேருந்தின் ஸ்டியரிங்கில் சரிந்துள்ளாா்.
பொதுமக்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டுசென்ற போது மாரியப்பன் ஏற்கனவே இறந்துள்ளது தெரியவந்தது.
நெருக்கடியான சாலையில் பாதசாரிகளுக்கும் பாதிப்பில்லாமல், பேருந்தில் பயணம் செய்த பயணிகளையும் பத்திரமாக பாதுகாத்து தன் உயா்நீத்துள்ளாா் ஓட்டுநா் மாரியப்பன். அவா், பழைய ஓய்வூதிய திட்டத்தில் இல்லாததால் குடும்ப ஓய்வூதியம் கிடைக்காது.
மாத ஊதியம், குடும்ப ஓய்வூதியம் இன்றி நிா்கதியாக நிா்க்கும் மாரியப்பன் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்திட வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.