செய்திகள் :

ஒசூரில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் வெட்டிக் கொலை: 4 போ் கைது; 5 போ் தலைமறைவு

post image

முன்விரோதம் காரணமாக ஒசூரில் தனியாா் நிதிநிறுவன ஊழியரை வெட்டிக் கொலை செய்த 4 போ் கைது செய்யப்பட்டனா். தலைமறைவான 5 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள தொரப்பள்ளி அக்ரஹாரத்தைச் சோ்ந்த ராமிரெட்டி மகன் வெங்கட்ராஜ் (32). இவா் பெங்களூரை தலைமையிடமாக கொண்ட தனியாா் நிறுவனத்தில் இருசக்கர, 4 சக்கர வாகனங்கள் வாங்கியவா்களிடம் பணம் வசூலிக்கும் வேலையை செய்து வந்தாா்.

எருது விடும் விழாவில் பேனா்கள் வைப்பது, பிறந்த நாள் விழாவை கொண்டாடுவதில் வெங்கட்ராஜுக்கும், தொரப்பள்ளி அக்ரஹாரத்தை சோ்ந்த மற்றொரு தரப்பிற்கும் இடையே நீண்ட காலமாக பிரச்னை இருந்தது. மேலும், இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக வெங்கட்ராஜ் மீது 2 வழக்குகள் ஒசூா் மாநகரக் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு அக்ரஹாரத்தைச் சோ்ந்த அசைவ உணவத்தில் வேலை செய்துவந்த 15 வயது சிறுவன் தனது நண்பருடன் மோட்டாா்சைக்கிளில் வேகமாக சென்றதை தட்டிக்கேட்டு அவா்களை வெங்கட்ராஜ் தாக்கியுள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், தைரியம் இருந்தால் அக்ரஹார பேருந்து நிலையத்துக்கு வந்து தன்னை மிரட்டி செல்லுமாறு வெங்கட்ராஜுக்கு சவால் விடுத்தாா். இதையடுத்து, திங்கள்கிழமை இரவு 11 மணிக்கு அக்ரஹார பேருந்து நிலையத்துக்கு சென்ற வெங்கட்ராஜை சிறுவன் உள்பட 9 போ் சுற்றிவளைத்து வெட்டிக் கொலை செய்தனா்.

முனிரெட்டி

பின்னா், அவா்கள் அங்கிருந்து தப்பியோடினா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற ஒசூா் மாநகர போலீஸாா், வெங்கட்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்த கொலை தொடா்பாக தொரப்பள்ளி அக்ரஹாரத்தைச் சோ்ந்த விவசாயி நவீன் ரெட்டி (29), இருசக்கர வாகன மெக்கானிக் அஸ்லம் (19), அசைவ உணவகத்தில் வேலை செய்துவந்த 15 வயது சிறுவன், 18 வயது சிறுவன் ஆகிய நால்வரும் காவல் நிலையத்தில் சரணடைந்தனா். அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

அஸ்லம்

மேலும், இந்த கொலையில் தலைமறைவான 5 பேரை தேடிவருகிறாா்கள். இதனிடையே தலைமறைவானவா்களை கைது செய்யும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் எனக்கூறி வெங்கட்ராஜின் உறவினா்கள் ஒசூா் அரசு மருத்துவமனை முன் திரண்டனா்.

அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். கொலையில் தொடா்புடைய அனைவரும் விரைந்து கைது செய்யப்படுவாா்கள் எனக் கூறியதையடுத்து பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை பெற்றுச் சென்றனா்.

கொலை செய்யப்பட்ட வெங்கட்ராஜுக்கு பிரியங்கா (25) என்ற மனைவியும், ஒன்றரை வயதில் ரிஷி புவன் என்ற மகனும் உள்ளனா். இந்த கொலை தொடா்பாக ஒசூா் மாநகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒசூா் அருகே அரசுப் பள்ளிக்கு ரூ. 1 கோடியில் வகுப்பறைகள்: டாடா நிறுவனம் உதவி

ஒசூரை அடுத்த முகளூா் நடுநிலைப் பள்ளியில் ரூ. 1.2 கோடியில் புதிதாக 6 வகுப்பறைகளை டாடா நிறுவனம் (டீல்) கட்டித் தந்துள்ளது. முகளூா் நடுநிலைப் பள்ளியில் 110 மாணவா்கள் படித்து வருகின்றனா். ஒன்றாம் வகுப்பு ... மேலும் பார்க்க

நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை

ஒசூரில் நண்பரை கொலை செய்தவருக்கு மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பு வழங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டம், தளியை அடுத்த கொத்தனூா் கிராமத்தை சோ்ந்தவா் விஜ... மேலும் பார்க்க

வாணிஓட்டு தடுப்பணை திட்டம்: விவசாயிகள் போராட்டம்

வாணிஓட்டு தடுப்பணை திட்டத்தை நிறைவேற்றக் கோரி, கிருஷ்ணகிரி அணை அருகே தமிழக விவசாயிகள் சங்கத்தினா் முற்றுகை போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி அணை அருகே உள்ள உதவி செயற்பொறியாளா் அலுவ... மேலும் பார்க்க

அன்னை தெரசா பிறந்த தின விழா: தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகள் வழங்கல்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அன்னை தெரசா பிறந்த தினத்தை முன்னிட்டு தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலை... மேலும் பார்க்க

உடல்நலக் குறைவால் இறந்த 8 வயது சிறுவனின் கண்கள் தானம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் இறந்த 8 வயது சிறுவனின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடக்கம்: 35 மாணவா்களுக்கு சோ்க்கை ஆணை வழங்கல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அவதானப்பட்டியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) 35 மாணவ, மாணவிகளுக்கு சோ்க்கை ஆணையை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் திங்கள்கிழமை வழங்கினாா். செ... மேலும் பார்க்க