செய்திகள் :

``ஒளியை விட வேகமாக குதித்தவர்'' - உலக சாதனை படைத்த ஃபெலெக்ஸ் பாம்கார்ட்னர் உயிரிழந்தார்!

post image

விண்வெளியின் விளிம்பில் இருந்து குதித்து ஸ்கை டைவிங்கில் உலக சாதனை படைத்த `Fearless Felix' எனப் புகழப்படும் ஃபெலெக்ஸ் பாம்கார்ட்னர் (56) உயிரிழந்தார்.

இத்தாலியைச் சேர்ந்த இவர் 1999-ல் ரியோ-டி-ஜெனிரோவில் உள்ள பேஸ் ஜம்பில் இருந்து 98 அடி உயரத்திற்கு குதித்து சாதனை படைத்தார். அதே ஆண்டில் மலேசியாவின் பெட்ரோனாஸ் டவரில் இருந்து குதித்ததன் மூலம், 'உலகிலேயே பாராசூட் மூலம் மிக உயரமான இடத்திலிருந்து குதித்த நபர்' என்ற சாதனைப் புரிந்தார்.

ஃபெலெக்ஸ் பாம்கார்ட்னர்
ஃபெலெக்ஸ் பாம்கார்ட்னர்

2012-ம் ஆண்டு 1,28,000 அடி உயரத்தில் பூமியின் வளிமண்டலத்தின் மேலடுக்கில் (stratosphere) இருந்து குதித்து, மிக உயரமான ஸ்கை டைவிங் என்ற சாதனையை நிகழ்த்தி பிரபலமானார்.

மணிக்கு 1,342 கிமீ வேகத்தில் ஒலியின் வேகத்தை விட வேகமாக பூமியை நோக்கி வந்தவர் என்ற சாதனையால் உலகம் முழுவதிலிருந்து இவர் கவனம் பெற்றார். ஸ்கை டைவிங் குறித்து ஃபெலெக்ஸ் பாம்கார்ட்னர், ``உலகின் உச்சியில் நிற்கும்போது நீங்கள் மிகவும் அடக்கமாக மாறிவிடுவீர்கள். சாதனைகளை முறியடிக்கவோ, அறிவியல் ஆய்வுகளை தகர்க்கவோ நினைக்க மாட்டீர்கள். உயிரோடு திரும்பினால் போதும் என்றே தோன்றும்" என்றார்.

இந்த நிலையில், கிழக்கு மார்ச்சே பகுதியில் உள்ள போர்டோ சாண்ட் எல்பிடியா என்ற கிராமத்தின் அருகே பாரா-கிளைடிங் செய்து கொண்டிருந்த போது திடீரென விபத்து ஏற்பட்டு, ஃபெலெக்ஸ் பாம்கார்ட்னர் உணவகம் ஒன்றின் நீச்சல் குளத்தில் விழுந்து உயிரிழந்தார்.

ஃபெலெக்ஸ் பாம்கார்ட்னர்
ஃபெலெக்ஸ் பாம்கார்ட்னர்

இந்த விபத்து குறித்து, போர்டோ சாண்ட் எல்பிடியா கிராமத்தின் மேயர் மிஸிமில்லியானோ சியார்பெல்லா, ``வானில் பறக்கும் போது ஃபெலெக்ஸ் பாம்கார்ட்னருக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். அல்லது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கூட விபத்து ஏற்பட்டிருக்கலாம்" எனத் தெரிவித்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் இவரின் பாரா-கிளைடிங் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

`கையெழுத்துக்காக அறையில் பூட்டி கட்டாயப்படுத்தினர்!' - கரிஷ்மா கபூர் முன்னாள் கணவரின் தாயார் புகார்!

பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் கடந்த ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு லண்டனில் காலமானார். அவர் மறைவை தொடர்ந்து அவர் விட்டுச் சென்ற ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கம்பெ... மேலும் பார்க்க

Zepto: மறைமுக கட்டணமா? - `COD டெலிவரியில் இதான் நடக்கிறது' - மார்க்கெட்டிங் நிபுணர் சொல்வதென்ன?

பிரபல விரைவு வர்த்தக தளமான ஜெப்டோ, கேஷ் ஆன் டெலிவரி (COD) ஆர்டர்களில் மறைமுகமாக கட்டணம் விதிப்பதாகவும், இதை வாடிக்கையாளர்களுக்கு தெளிவாக தெரிவிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பெங்களூருவைச... மேலும் பார்க்க

மும்பை: தொடர் ரயில் குண்டுவெடிப்பு; 12 குற்றவாளிகளை விடுவிக்கும் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை!

மும்பையில் 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி 7 புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 180 பேர் வரை உயிரிழந்தனர். 700 பேர் காயம் அடைந்தனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய... மேலும் பார்க்க

சிங்கப்பூர்: ஏர்போர்ட் கடைகளில் ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு - சிக்கிய இந்தியர்

சிங்கப்பூர் ஜூவல் சாங்கி விமான நிலையத்தில் உள்ள 14 கடைகளில் இருந்து பைகள், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட சுமார் 3.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை 38 வயது இந்தியர் ஒருவர் திருடியதாக அந்நாட்டு காவ... மேலும் பார்க்க

AI -பேச்சால் ஈர்க்கப்பட்டு, மனைவியிடம் விவாகரத்து கேட்ட 75 வயது முதியவர் - சீனாவில் நடந்த சம்பவம்

சீனாவில் 75 வயதான முதியவர் ஒருவர், ஆன்லைனில் பார்த்த ஒரு "பெண்ணின்" பேச்சால் ஈர்க்கப்பட்டு, தனது மனைவியிடம் விவாகரத்து கோரியுள்ளார்.அந்தப் "பெண்" ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) என்பது அவருக்கு தெரியவில்லை... மேலும் பார்க்க

இந்தியா - இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் முதல் ஹல்க் ஹோகன் உயிரிழப்பு வரை | ஜூலை 24 ரவுண்ட்அப்

இன்றைய நாளின் (ஜூலை 24) முக்கியச் செய்திகள்!* இங்கிலாந்தில் பிரதமர் மோடி மற்றும் அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முன்னிலையில் இரு நாடுகளுக்குமிடையே ஃப்ரீ ட்ரேட் ஒப்பந்தம் (Free Trade Agreement - FT... மேலும் பார்க்க