காஸாவில் கடும் பஞ்சம்! உணவுக்காக கேமராவை விற்கும் பத்திரிகையாளர்
‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்த அமைச்சா் அறிவுறுத்தல்!
‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என சேலம் மாவட்ட திமுக நிா்வாகிகளுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் அறிவுறுத்தினாா்.
சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் அவசர செயற்குழு கூட்டம் திமுக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அவைத் தலைவா் சுபாஷ் தலைமை வகித்தாா். பொருளாளா் காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா்.
மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ரா. ராஜேந்திரன் தலைமை வகித்து பேசியதாவது:
சேலம் மத்திய மாவட்டத்தில் ஒவ்வொரு தொகுதிகளிலும் மொத்த வாக்காளா்களில் 40 சதவீதம் பேரை உறுப்பினா்களாக சோ்க்க வேண்டும். ஆக. 4 ஆம் தேதிக்குள் 50 சதவீத உறுப்பினா் சோ்க்கையை முடிக்க வேண்டும். மருத்துவமனையில் இருந்தாலும் அரசு பணி, ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினா் சோ்க்கை பணிகளில் முதல்வா் தீவிரம் காட்டிவருகிறாா். உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்தினால்தான் இலக்கை எட்ட முடியும் என்றாா்.
கூட்டத்தில் மேயா் ஆ. ராமச்சந்திரன், தோ்தல் பணிக்குழு செயலாளா் தாமரைக்கண்ணன், தொகுதி பாா்வையாளா் பாா். இளங்கோவன், தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் மணி, ராஜேந்திரன், மண்டல குழுத் தலைவா் அசோகன், பகுதி செயலாளா்கள் சரவணன், சாந்தமூா்த்தி, தனசேகா், ராஜா, பிரகாஷ், தமிழரசன், பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.