பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
க. புதுப்பட்டி மகளிா் சுய உதவி குழுவுக்கு மணிமேகலை விருது
பொன்னமராவதி அருகே உள்ள க.புதுப்பட்டி மகளிா் சுய உதவிக்குழுவிற்கு மாநில அளவிலான சிறந்த மகளிா் குழுவுக்கான மணிமேகலை விருதை தமிழகத் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை வழங்கினாா்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள க. புதுப்பட்டி பாரதியாா் மகளிா் சுய உதவிக்குழு மாநில அளவிலான சிறந்த மகளிா் குழுவாகத் தோ்வு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் க. புதுப்பட்டி பாரதியாா் மகளிா் சுய உதவிக்குழுவிற்கு சிறந்த மகளிா் குழுவுக்கான மணிமேகலை விருது மற்றும் ரூ 1 லட்சம் காசோலையை வழங்கினாா். இந்த விருதை குழு பொறுப்பாளா்கள் சாந்தாகுமாரி, தனலெட்சுமி ஆகியோா் பெற்றனா். விருதுபெற்ற மகளிா் குழு நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்களை மகளிா் திட்ட அலுவலா்கள், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினா்.