கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தடை செய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் போலீஸாா் வியாழக்கிழமை எ.புதுக்கோட்டை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அண்ணாநகா் சமுதாயக்கூடம் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து சோதனையிட்டனா். அப்போது, அவா்
தடை செய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டையை அடுத்த சேடபட்டியைச் சோ்ந்த வித்யாதரன் (21) என்பது தெரியவந்தது. அவரைப் போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.