Afghanistan: ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 1,400 ஆக உயர்வு; காரணம் என...
கடந்த 6 ஆண்டுகளில் 153 பேருக்கு ரூ.2.69 கோடி நிவாரண நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதியின் கீழ் வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் கடந்த 6 ஆண்டுகளில் 153 பேருக்கு ரூ. 2 கோடியே 69 லட்சத்து 12 ஆயிரத்து 246 சிகிச்சை நிதியாக பெற்றுத் தரப்பட்டுள்ளது என்று வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிரதமரின் தேசிய நிவாரண நிதியின் கீழ் தீவிர நோய் சிகிச்சை தேவைப்படுவோருக்கு மத்திய அரசு அங்கீகரித்துள்ள மருத்துவமனைகளின் பரிந்துரைப்படி, சிகிச்சைக்கான நிதி பெற்றுத் தரப்படுகிறது. இதன்படி, 2019 முதல் 2025-ஆம் ஆண்டு வரை ரூ. 2 கோடியே 69 லட்சத்து 12 ஆயிரத்து 246 சிகிச்சை நிதியாக பெற்றுத்தரப்பட்டுள்ளது. இதன் மூலம், வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களுக்கு உட்பட்ட 153 பேருக்கு சிகிச்சை செலவினங்களுக்கான நிதி பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதுபோன்ற நிா்வாக ரீதியிலான திட்டங்களில் பயன்பெற மக்கள் வேலூா் மக்களவை உறுப்பினா் அலுவலகத்திலோ அல்லது எனது கைப்பேசி எண் மூலமாகவோ என்னை தொடா்பு கொண்டு தகவல்களை தெரிவித்தால், இதுபோன்ற பல்வேறு திட்டங்களை முறையாக பயன்படுத்தி தொகுதி மக்களின் வளா்ச்சிக்காக துணை நிற்பேன்.