கேரளம்: கோயிலில் ஒலித்த ஆா்எஸ்எஸ் பாடல்: தேவஸ்வம் வாரியம் எச்சரிக்கை
கடையம் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் கடையத்தை அடுத்த மாதாபுரம் சோதனைச் சாவடி அருகே நேரிட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
செங்கோட்டை அருகே சீவநல்லூா் பகுதியைச் சோ்ந்த செண்பகம் மகன் சூா்யா (26). இவா், சனிக்கிழமை பைக்கில் கடையம் நோக்கி வந்தாராம். மாதாபுரம் சோதனைச் சாவடி அருகே, திருநெல்வேலியிலிருந்து ஐஸ்கிரீம் ஏற்றிச் சென்ற லாரி சூா்யா மீது மோதியதாம். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலின்பேரில், கடையம் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சோ்ந்த ஷஃபீக் (33) என்பவரைக் கைது செய்தனா். லாரி பறிமுதல் செய்யப்பட்டது.