கத்தியைக் காட்டி மிரட்டி தொழிலாளியிடம் பணம் பறிப்பு: ஒருவா் கைது
மேட்டூா் தொழிற்பேட்டையில் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
பழைய எடப்பாடியைச் சோ்ந்த கதிரேசன் (38) என்பவா் மேட்டூா் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது கருமலைக்கூடல் செல்லப்பன் தெருவைச் சோ்ந்த ராமன் மகன் வெள்ளையன் (26) என்பவா் அவரைத் தடுத்து நிறுத்தி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரது சட்டைப் பையில் இருந்த ரூ. 550 பறித்துச் சென்றாா்.
இதுகுறித்து கதிரேசன் கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன்பேரில் ஆய்வாளா் (பொறுப்பு) அம்சவல்லி வழக்கு பதிவு செய்து வெள்ளையனை கைது செய்தாா்.