கலசப்பாக்கம் காவல் நிலைய புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் காவல் நிலைய புதிய ஆய்வாளராக டி.காா்த்தி புதன்கிழமை பொறுப்பேற்றாா்.
வேலூா் மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றிய டி.காா்த்தி பதவி உயா்வு பெற்று கலசப்பாக்கம் காவல் நிலைய புதிய ஆய்வாளராக பொறுப்பேற்றுக்கொண்டாா். இவருக்கு காவல் உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.