மத்திய பல்கலை., கல்லூரிகளில் ஜாதிவாரி பாகுபாட்டை தடுக்க என்ன நடவடிக்கை?: கனிமொழி...
களியக்காவிளையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
களியக்காவிளை பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது.
களியக்காவிளை பேரூராட்சித் தலைவா் ஆ. சுரேஷ் தலைமை வகித்து, முகாமை தொடங்கி வைத்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் சந்திரகலா, வாா்டு உறுப்பினா்கள் சுனிதா, ஜெமிலா டெல்பின், ரிபாய் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
இதில், வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து மனுவைப் பெற்று, குறைகளைக் கேட்டறிந்தனா்.
தொடா்ந்து, மனு அளித்த பெண்ணுக்கு கூட்டுறவு உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை சாா்பில் உடனடியாக குடும்ப அட்டை பெயா் மாற்றத்துக்கான ஆணை வழங்கப்பட்டது.
முகாமில், விளவங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் தாரகை கத்பட் பங்கேற்று ஆய்வு செய்தாா்.
திமுக மூத்த நிா்வாகி எஸ். மாகீன் அபுபக்கா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.