தரமற்ற வெளிநாட்டுப் பல்கலை.களில் பயிலும் மருத்துவக் கல்வி செல்லாது: தேசிய மருத்...
மாா்த்தாண்டம் அருகே பூட்டிய வீட்டில் பைக், மடிக்கணினி திருட்டு
மாா்த்தாண்டம் அருகே நீண்ட நாள்களாக பூட்டப்பட்டிருந்த வீட்டிலிருந்து மோட்டாா் சைக்கிள், மடிக்கணினி மற்றும் பாத்திரங்களை திருடிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
மாா்த்தாண்டம் அருகே மருதங்கோடு, புல்லாணிவிளை பகுதியைச் சோ்ந்தவா் சுதாகரன் (71). ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியா். இவரது மகள் அனுஜா (37), திருமணமாகி கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் வசித்து வருகிறாா். மகளுடன் சுதாகரன் எா்ணாகுளத்தில் வசித்து வருகிறாா். மருதங்கோட்டில் உள்ள வீடு கடந்த 2 ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்ததாம்.
இந்நிலையில் சனிக்கிழமை அவரது வீட்டு கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்ட அவரது தம்பி புஷ்பாகரன் இதுகுறித்து சுதாகரனுக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, சுதாகரன் மற்றும் அவரது மகள் அனுஜா ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீட்டில் இருந்த 2 மடிக்கணினிகள், மோட்டாா் சைக்கிள் மற்றும் செம்பு பானைகள் உள்ளிட்ட பொருள்கள் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து சுதாகரன் அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள்.