மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்! - அா்ஜூன் சம்பத...
காகாபாளையம் ஏரியில் மீன்கள் இறப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு
காகாபாளையம் ஏரியில் மீன்கள் இறந்து மிதந்தது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.
மகுடஞ்சாவடி ஒன்றியம், கனககிரி ஊராட்சிக்கு உள்பட்ட காகாபாளையம் ஏரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீன்கள் இறந்து மிதந்தது குறித்து மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலா் சந்திரமலா், மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளா் கலைவேந்தன், மேட்டூா் மீன்வளத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் ஆய்வு செய்து,
ஏரி நீா், இறந்த மீன்கள், சாயக்கழிவு நீா் உள்ளிட்டவற்றை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனா்.
இதுகுறித்து ஏரி மீன் குத்தகைதாரா் கூறியதாவது:
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு ஏரியில் மீன்கள் இறந்தது தொடா்பாக ஏரி நீா், சாயக்கழிவு நீரை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனா். இதுவரை அதுகுறித்த விவரங்களை வெளியிடவில்லை.
தற்போது ஆய்வுக்கு வந்துள்ள அதிகாரிகள், மீன்கள் இறப்பு குறித்து பரிசோதனை செய்து உடனடியாக அறிக்கையை அளிப்பதாக உறுதி அளித்துள்ளனா் என்றாா்.