கிரிஷ் கங்காதரன் நிகழ்த்திய மேஜிக்... லோகேஷ் நெகிழ்ச்சி!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூலி படத்தின் ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் நிகழ்த்தியுள்ள மேஜிக்கை ரசிகர்கள் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் வருகிற ஆக. 14 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்துக்கு தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் பணியாற்றியுள்ளார்.
பான் இந்திய பிரபலங்கள் நடித்திருப்பதால் ரஜினிகாந்த்தின் அதிக வசூல் திரைப்படமாக இப்படம் அமையலாம் என எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.
இந்நிலையில், ஒளிப்பதிவாளர் கிரிஷ் குறித்து லோகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதாவது:
மீண்டும் உன்னோடு வேலை செய்தது மிக்க மகிழ்ச்சிளிக்கிறது மச்சி. நம்முடைய முதல் கூட்டுமுயற்சியில், லென்ஸ் வழியாக நீ என் பயணத்தை மட்டும் படம்பிடிக்கவில்லை. உன்னுடைய நோக்கம், கடின உழைப்பு, தொடர்ச்சியான ஆதரவுடன் கூலி படத்தில் மிகப்பெரிய பங்கை உருவாக்கியுள்ளாய்.
கூலி படத்தில் நீ உருவாக்கிய அற்புதத்தை அனைவரும் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
Happy to have worked with you once again @girishganges machi ❤️
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 8, 2025
Since our first collaboration, you’ve not only captured my journey through the lens but have also been a part of building it ❤️
Your vision, hard work, and constant support have played a huge role in #Coolie and… pic.twitter.com/4kwPHAcSbT