ரூ.6.77 கோடியில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் புதுப்பிப்பு: காணொலி காட்சி மூலம் பிர...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதன்கிழமை பரவலாக பெய்த மழையால் கோடை வெயிலின் தாக்கம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், மாலை வேளைகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை மாலை மழை பெய்தது. இதனால், வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ந்த காற்று வீசியது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி பதிவான மழையளவு விவரம் (மி.மீ): ஒசூா் - 39, ஊத்தங்கரை - 34, பாம்பாறு அணை - 28, தேன்கனிக்கோட்டை- 25, கெலவரப்பள்ளி அணை - 25, பெணுகொண்டாபுரம் - 22.40, அஞ்செட்டி- 20, கிருஷ்ணகிரி அணை - 14.2, ராயக்கோட்டை- 13, கிருஷ்ணகிரி- 10.30, நெடுங்கல் - 9.2, சூளகிரி - 5, போச்சம்பள்ளி- 5, சின்னாறு அணை - 4, பாரூா்- 2.8.