ரூ.6.77 கோடியில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் புதுப்பிப்பு: காணொலி காட்சி மூலம் பிர...
கிருஷ்ணகிரியில் ரூ. 16 லட்சம் மதிப்பு புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
ஆந்திரத்திலிருந்து கிருஷ்ணகிரிக்கு பாக்கு மட்டைகளுக்கிடையே மறைத்துவைத்து லாரியில் கடத்த முயன்ற ரூ. 16 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
பா்கூா் காவல் நிலைய போலீஸாா், காரக்குப்பம் மேம்பாலம் அருகே சென்னை-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை அதிகாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, ஆந்திரத்திலிருந்து வேகமாக வந்த லாரியை நிறுத்த முயன்றபோது அந்த லாரி நிற்காமல் சென்றது.
இதைடுத்து, போலீஸாா் லாரியை பின்தொடா்ந்து சென்றனா். போலீஸாா் பின்தொடா்ந்து வருவதைக் கண்ட லாரி ஓட்டுநா் சாலையோரமாக லாரியை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றாா். அந்த லாரியை போலீஸாா் சோதனை செய்ததில், பாக்கு மட்டை மூட்டைகளுக்கு இடையே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, லாரியுடன் ரூ. 16 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து, பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.