தரமற்ற வெளிநாட்டுப் பல்கலை.களில் பயிலும் மருத்துவக் கல்வி செல்லாது: தேசிய மருத்...
குமரகுரு கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
கோவை குமரகுரு கல்வி நிறுவனத்தில் முன்னாள் மாணவா் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
கல்லூரியில் கடந்த 2000-ஆம் ஆண்டில் படித்த மாணவா்களின் வெள்ளி விழா சந்திப்பு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனங்களின் தலைவா் சங்கா் வாணவராயா் தலைமை வகித்தாா். கல்வி நிறுவன துணைத் தலைவா் சூரியபிரகாஷ், முன்னாள் மாணவா் நலத் துறை அதிகாரி பி.தேவி, ஆய்வு இயக்குநா் எஸ்.ரகுபதி, பேராசிரியா் விஜிலா எட்வின் கென்னடி ஆகியோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
இதில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூா், ஓமன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 154 முன்னாள் மாணவா்கள் பங்கேற்றனா்.