செய்திகள் :

குமரி: ஹோட்டலில் QR Code-ஐ மாற்றி ரூ.14 லட்சம் மோசடி - ஊழியரையும், உறவினர் பெண்ணையும் தேடும் போலீஸ்

post image

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பீச்ரோடு சந்திப்பை சேர்ந்தவர் ஆஸ்டின் ( 48). இவர் அந்த பகுதியில் பரோட்டா கடை  நடத்தி வருகிறார். ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் பணத்தை செலுத்த க்யூ.ஆர் கோடு ஸ்கேனர் வசதி செய்யப்பட்டிருந்தது. அதில் ஆஸ்டினின் வங்கி கணக்கு இணைக்கப்பட்டு இருந்தது. இவரது ஓட்டலில் பூதப்பாண்டியை சேர்ந்த இவரின் உறவினர் வேணுகுமார் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக கணக்குகளை கவனித்து வந்தார்.

QR Code-ஐ மாற்றி...

ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த ஆஸ்டினின் வங்கிக்கணக்கு இணைக்கப்பட்ட க்யூ.ஆர் கோடை மாற்றிவிட்டு, அதில் தனது வங்கி கணக்கின் க்யூ.ஆர் கோடை ஒட்டி வைத்துள்ளார் வேணுகுமார். ஓட்டலில் சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு முடித்துவிட்டு பில் தொகையை க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்தியுள்ளனர். அந்த பணம் வேணுகுமாரின் வங்கிக்கணக்குக்கு சென்றுள்ளது.

வேணுகுமார்

இதற்கிடையே ஓட்டலில் வருவாய் குறைவாக வருவதாக ஆஸ்டினுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து தனது வங்கி கணக்குகளை ஆஸ்டின் சரி பார்த்தபோது க்யூ.ஆர். கோடு மூலம் செலுத்தும் பணம் தனது வங்கி கணக்கில் வராமல் இருப்பதை கண்டுபிடித்தார். அந்த கியூ.ஆர் கோட் குறித்து விசாரித்ததில் வேணுகுமார் தனது வங்கி கணக்கின் க்யூ.ஆர் கோடை இணைத்து மோசடி செய்தது தெரியவந்தது.

க்யூ.ஆர் கோடை மாற்றி சுமார் 14 லட்சம் ரூபாய் வரை தனது வங்கி கணக்கில் பெற்று வேணுகுமார் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்த பணத்தில் ஒரு பங்கை தனது உறவினரான சென்னையைச் சேர்ந்த மீனா (27) என்ற பெண்ணுக்கும் அனுப்பி வைத்திருக்கிறார் வேணுகுமார்.

மீனா

வேணுகுமாரின் மோசடி குறித்து நாகர்கோவில் நீதிமன்றத்தில்  ஆஸ்டின் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வேணுகுமார் மற்றும் மீனா மீது நடவடிக்கை எடுக்க கோட்டார் போலீஸாருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் கியூ.ஆர் கோட் மூலம் மோசடி செய்ததாக வேணுகுமார் மற்றும் மீனா ஆகிய 2 பேர்  மீதும் கோட்டார் போலீஸார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவாக இருக்கும் இரண்டு பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

நடிகர் விஜய் தேவரகொண்டா அமலாக்கத்துறை முன் ஆஜர்; என்ன காரணம்?

ஆன்லைன் சூதாட்ட தளங்களை விளம்பரப்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில், நடிகர் விஜய் தேவரகொண்டா இன்று ஹைதராபாத்தின் பஷீர்பாக் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.அமலாக்கத்துறை வட்... மேலும் பார்க்க

``இது லாக்கப் மரணம் இல்லை'' நேற்று இரவு நடந்தது என்ன? - கோவை காவல் ஆணையர் விளக்கம்

சிவகங்கை காவல் கஸ்டடியில் இருந்த அஜித்குமாரை, காவல்துறையினர் கடுமையாக தாக்கியத்தில் உயிரிழந்தார். இதேபோல கடந்த வாரம் திருப்பூர் மாவட்டம், வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் ம... மேலும் பார்க்க

திருப்பூரில் கொலை செய்யப்பட்ட எஸ்.ஐ. சண்முகவேல்; 30 லட்சம் நிவாரணம் வழங்கிய ஸ்டாலின்

திருப்பூர் உடுமலை அருகே கொலை செய்யப்பட்ட எஸ்.ஐ. சண்முகவேல் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். திருப்பூர் மாவட்டம் சின்னகனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் எம்எல்ஏ மகேந்தி... மேலும் பார்க்க

திருப்பூர்: எம்எல்ஏ தோட்டத்தில் `காவல் உதவி ஆய்வாளர்' கொடூரமாக வெட்டிக் கொலை; என்ன காரணம்?

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்... மேலும் பார்க்க

வழக்கறிஞர் கொலை வழக்கு; 90 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு - நடந்தது என்ன?

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தவர் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி முருகானந்தம். இவரது சித்தப்பா தண்டபாணி (60). இவருக்கும், முருகானந்தத்தின் தந்தையான... மேலும் பார்க்க

'50 சிசேரியன்' செய்த வசூல்ரஜா MBBS; 10 வருட 'போலி' மருத்துவர் - சிக்கியது எப்படி?

கமல் நடிப்பில் வந்த காமெடி படமான வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படம் போல நிஜ வாழ்க்கையில் வலம் வந்த போலி மருத்துவர் அசாம் மாநிலத்தில் சிக்கியுள்ளார்.சில்சார் என்ற நகரில் மகளிர் மருத்துவ அறுவை சிகிச்சை நிபுண... மேலும் பார்க்க