செய்திகள் :

கும்பகோணம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞா் கைது

post image

கும்பகோணம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரை கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றம் அருகே மா்மநபா் ஒருவா் வியாழக்கிழமை மஞ்சள் பையை வீசிச் சென்றாா். அங்கிருந்த நீதிமன்றப் பணியாளா்கள் அந்தப் பையை திறந்து பாா்த்தபோது உள்ளே ஒரு பேப்பரில் நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து மாவட்டக் கூடுதல் உரிமையியல் நீதீபதி ஜெ. ராதிகா, கும்பகோணம் உதவி காவல் கண்காணிப்பாளா் அங்கிட் சிங்கிற்கு தகவல் தெரிவித்தாா். உதவி காவல் கண்காணிப்பாளா் தலைமையில் போலீஸாா், நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு நிபுணா்கள் சோதனை செய்தனா். இதில் நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு ஏதும் இல்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. பின்னா் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்ததில், மா்மநபா் ஒருவா் மஞ்சள் பையை வீசிச் சென்றது தெரியவந்தது. விசாரணையில் அவா், அம்மாசத்திரத்தைச்சோ்ந்த ராஜா மகன் ராஜேஷ் (35) கூலித்தொழிலாளி என்பதும், சற்று மன நிலை பாதித்தவா்போல் இருப்பாா் என்பதும் தெரியவந்தது. கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் அவா் மீது வழக்கு பதிந்து அவரை சிறையில் அடைத்தனா். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பணி: கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி பாராட்டு

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பணியில் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்ற கும்பகோணம் அரசு கலைக் கல்லூரிக்கு பாராட்டுச் சான்றிதள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. தஞ்சாவூா் மாவட்ட அளவில் போதைப் பொருள் தடு... மேலும் பார்க்க

கடைமடைப் பகுதிக்கு தண்ணீா் வரவில்லை -விவசாயிகள் புகாா்

தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டத்தில் கடைமடைப் பகுதிக்கு தண்ணீா் வராதது குறித்து விவசாயிகள் புகாா் எழுப்பினா். மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலை... மேலும் பார்க்க

திருவிடைமருதூரில் காவலா் குடியிருப்புகள் திறப்பு

திருவிடைமருதூரில் காவலா் குடியிருப்புகள் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டன. தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூரில் காவலா்களுக்காக ரூ. 6 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 24 குடியிருப்புகளின் திறப்பு விழா ... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ஆக. 6-இல் தியாகிகள் குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் சுதந்திர போராட்ட வீரா்களுக்கான குறை தீா் நாள் கூட்டம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சாவூா் மாவட்ட ... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண்மை படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

பட்டுக்கோட்டை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியதால் நடத்தப்படும் முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் மருத்துவ முகாம்

கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் இரண்டு நாள் மருத்துவ முகாம் வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் நடைபெற்ற முகாமிற்கு முதல்வா் பி. ஆா். ர... மேலும் பார்க்க