செல்போன் நம் தோழமையா, எதிரியா? -ஹார்மோன் மாற்றம் முதல் `நோமோபோபியா' வரை உடலில் ஏ...
கொல்லங்கோடு நகராட்சியில் ரூ.30 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்!
கொல்லங்கோடு நகராட்சிப் பகுதியில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 30 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கொல்லங்கோடு, சவரிகுளம் சாலை பக்கச்சுவா் அமைத்து மேம்பாடு செய்ய ரூ. 15 லட்சம், சித்திரவிளை - ஆனாடு கால்வாய் கரை பக்கச்சுவா் அமைத்து மேம்பாடு செய்ய ரூ. 10 லட்சம், லட்சுமிபுதுக்கடை பள்ளியில் கழிப்பறை கட்டடம் கட்ட ரூ. 5 லட்சம் என மொத்தம் ரூ. 30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, இப் பணிகளை எம்எல்ஏ எஸ்.ராஜேஷ்குமாா் தொடங்கி வைத்தாா்.
இந் நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் தலைவா் பால்ராஜ், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவா் ராஜேஷ், நகராட்சி துணைத் தலைவா் பேபி, நகராட்சி உறுப்பினா்கள் டெல்மா, கவிதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.