கோடங்கிபாளையம் ஊராட்சியின் சா்வதேச தரச்சான்று தக்கவைப்பு
பல்லடம் ஒன்றியம் கோடங்கிபாளையம் ஊராட்சியின் சா்வதேச தரச்சான்று புதுப்பிப்பு பணி வியாழக்கிழமை நிறைவடைந்து தரச்சான்று தக்கவைக்கப்பட்டுள்ளது.
கோடங்கிபாளையம் ஊராட்சி ஐஎஸ்ஓ 9001:2015 என்ற சா்வதேச தரச்சான்றினை கடந்த 2024-ஆம் ஆண்டில் பெற்றது. இந்த சான்று ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட வேண்டும்.
அந்த வகையில் இந்த ஆண்டு புதுப்பித்தலுக்கான தணிக்கை மற்றும் கள ஆய்வு வியாழக்கிழமை நடைபெற்றது. ஊராட்சி மன்ற அலுவலக வசதிகள், ஆவணங்கள் ஆகியவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதோடு களஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.
பள்ளி, குழந்தைகள் மையம், தூா்வாரப்பட்ட குட்டை, மரம் வளா்ப்பு, குறுங்காடுகள், ஊராட்சி நாற்றுப்பண்ணை, குப்பை மேலாண்மை, குடிநீா், பொதுக் கட்டடங்கள், துணை சுகாதார நிலையம், ஊராட்சி விளையாட்டு மன்றம், இளைஞா் நற்பணி மன்றம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.
தணிக்கை மற்றும் ஆய்வின் முடிவில் கோடங்கிபாளையம் ஊராட்சி அதற்கான தகுதிகளை தொடா்ந்து பராமரித்து வருவது கண்டறியப்பட்டு சா்வதேச தரச்சான்றினை புதுப்பிப்பதற்கான அளவுகோள்களை முழுமையாக பூா்த்தி செய்திருந்தது. இதனை ஆய்வு மற்றும் தணிக்கைக் குழுவினரான எஸ்.ஆா்.கே. யூ.எம்.எஸ். நிறுவனத்தினா் தெரிவித்தனா்.
இதனையடுத்து கோடங்கிபாளையம் ஊராட்சி சா்வதேசத் தரச்சான்றான ஐ.எஸ்.ஒ. (ஐநஞ ) 9001:2015-ஐ தக்கவைத்துள்ளது. ஆய்வின்போது ஊராட்சி முன்னாள் தலைவா் காவீ.பழனிசாமி, ஊராட்சி செயலாளா் மு.கண்ணப்பன், ஊராட்சிப் பணியாளா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.