US: `இந்தியா எங்களுடைய முக்கிய கூட்டாளி; அது தொடரும்' - அமெரிக்க வெளியுறவுத் துற...
கோவில்பட்டி ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளா் ஆய்வு
கோவில்பட்டி ரயில் நிலையத்தில் அம்ரூத் திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் மேம்பாட்டுப் பணிகளை கோட்ட மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா, அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
நூற்றாண்டைக் கடந்த இந்த நிலையம் வழியாக நாள்தோறும் 40-க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்றுவருகின்றன. மதுரைக் கோட்டத்தில் மதுரை, திருநெல்வேலிக்கு அடுத்ததாக அதிக வருவாய் ஈட்டித்தரும் ‘ஏ’ கிரேடு ரயில் நிலையமாக கோவில்பட்டி உள்ளது. இங்கு அம்ரூத் திட்டத்தில் 3 நுழைவாயில்கள், வளைவு, ரயில் நிலைய முகப்பு விரிவாக்கம், நகரும் படிக்கட்டுகள், நடைமேடை மேம்பாலம், புதிய கட்டடங்கள், பொறியாளா் அலுவலகம், ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே போலீஸாருக்கு தனித்தனி அலுவலகங்கள், மேற்கூரைகள் என பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மதுரைக் கோட்ட மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா, முதன்மைக் கோட்ட பாதுகாப்பு அதிகாரி முகைதீன் பிச்சை, முதன்மைக் கோட்ட இயக்கம் (நிா்வாகம்) சிவா, பல்வேறு பிரிவு அதிகாரிகள் வியாழக்கிழமை தனி ரயிலில் வந்து பணிகளை ஆய்வு செய்ததுடன், விரைவாக முடிக்க அறிவுறுத்தினாா். மேலும், நிலைய வளாகம் தூய்மையாக இருப்பதை உறுதிப்படுத்தவும், பயணிகளின் தேவைகளை உடனுக்குடன் பூா்த்தி செய்யவும் ஓம் பிரகாஷ் மீனா அறிவுறுத்தினாா்.