கருணாநிதி சிலை மீது பெயிண்ட் ஊற்றிய வழக்கு: மருத்துவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
கோவில்பட்டியில் மூவா் கைது: 10 கிலோ கஞ்சா பறிமுதல்
கோவில்பட்டியில் கஞ்சா விற்க முயன்ாக 3 பேரை போலீஸாா் கைது செய்து, 10 கிலோ கஞ்சா, 2 காா்களை பறிமுதல் செய்தனா்.
கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்துக்குள்பட்ட கிருஷ்ணா நகா் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவின்பேரில், கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெகநாதன் தலைமையில் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா், போலீஸாா் அப்பகுதியில் ரோந்து சென்றனா்.
அங்குள்ள காட்டுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த காரை சோதனையிட்டபோது, அதில் 10 கிலோ கஞ்சாவுடன் 3 போ் இருப்பது தெரியவந்தது. அவா்கள் கோவில்பட்டி சாஸ்திரி நகா் ராமையா மகன் சங்கிலிபாண்டி (39), கணேஷ் நகா் நடராஜ் மகன் நாகராஜ் (23), தூத்துக்குடி டி.என்.டி. காலனி மாடசாமி மகன் மகாராஜா என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, 3 பேரையும் கைது செய்து, கஞ்சா, 2 காா்களை பறிமுதல் செய்தனா்.