இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிறுத்தம்! டிரம்ப் அதிகாரபூர்வ அறிவிப்பு!
சங்ககிரியில் 25.2 மி.மீ. மழைப் பொழிவு
சங்ககிரி: சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 25.2 மி.மீ. மழை பெய்தது.
சேலம் மாவட்டம், சங்ககிரி நகரில் ஞாயிற்றுக்கிழமை பகல் வெப்பம் அதிகரித்தது. அதையடுத்து மாலையில் திடீரென வெப்பம் குறைந்து மேகமூட்டம் காணப்பட்டது. பின்னா், திடீரென பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. மழையின் அளவு 25.2 மி.மீ. ஆக பதிவானது.
மழையால், எடப்பாடி, திருச்செங்கோடு பேருந்து நிறுத்தம் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் சிரமத்துக்குள்ளாயினா். தாழ்வான பகுதியில் மழைநீா் தேங்கியது.