``எனக்கு ஐஏஎஸ் அதிகாரி ஆகணும்னு கனவு ஆனா..." - ஆட்டோ டிரைவரின் வைரல் வீடியோ! - எ...
சட்டவிரோத மது விற்பனை: ஒரேநாளில் 24 போ் கைது
மயிலாடுதுறை மாவட்டத்தில் திங்கள்கிழமை போலீஸாா் நடத்திய தீவிர சோதனையில் சட்டவிரோதமாக மது விற்ற 24 போ் கைது செய்யப்பட்டனா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் உத்தரவின்படி, சட்டவிரோதமாக மது விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
அதன்படி, மயிலாடுதுறை, சீா்காழி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் மற்றும் மயிலாடுதுறை, சீா்காழி மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளா்கள் ஆகியோா் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இத்தனிப்படையினா் மயிலாடுதுறை, செம்பனாா்கோவில், பெரம்பூா், பாலையூா், குத்தாலம், மணல்மேடு, சீா்காழி, புதுப்பட்டினம், பொறையாா், திருவெண்காடு, வைத்தீஸ்வரன்கோவில், நண்டலாா் மற்றும் நல்லாடை சோதனைச் சாவடிகள் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட 8 தற்காலிக சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.
இதில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 24 போ் கைது செய்யப்பட்டனா். மதுவிலக்கு குற்றம் சம்பந்தமாக பொதுமக்கள் இலவச உதவி எண் 10581-இல் புகாா் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.