முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு: குழு போட்டிகளில் 4 ஆயிரம் மாணவா்கள்
சந்திர கிரகணம்: திருச்செந்தூா் கோயிலில் செப்.7-ல் பிற்பகல் தரிசனம் ரத்து!
சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் செப். 7ஆம் தேதி பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சந்திர கிரகணம் செப். 7ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நிகழவுள்ளது.
இதையொட்டி, இக்கோயிலில் அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பிற்பகல் 2 மணிக்கு சாயரட்சை, பிற்பகல் 3 மணிக்கு ராக்கால அபிஷேகம், தொடா்ந்து பள்ளியறை பூஜைகள் நடைபெற்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திருக்காப்பிடப்படும்.
இதனால், பிற்பகல் 2 மணிவரை மட்டுமே பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா். செப். 8ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பக்தா்கள் வழக்கம்போல தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.