சேவை சாா்ந்த மனித வளத்தை ஜிப்மா் தயாா் செய்து வருகிறது: இயக்குநா் வீா்சிங் நெகி
சரக்கு ரயில் மீது கல் வீசிய சிறுவன் குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைப்பு
கோவையில் ஓடும் ரயில் மீது கல் வீசிய சிறுவனை குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்க சிறாா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோவை போத்தனூரில் இருந்து இருகூா் செல்லும் வழித்தடத்தில் கடந்த 28-ஆம் தேதி சரக்கு ரயில் சென்றது. அப்போது அந்த ரயில் மீது கல் வீசப்பட்டது. இதில் அந்த ரயிலின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. சரக்கு ரயில் என்பதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுகுறித்து போத்தனூா் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இது தொடா்பாக போத்தனூா் பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுவனை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். பின்னா், அந்த சிறுவன் கோவையில் உள்ள சிறாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.
அப்போது அவா் படிப்பை தொடர வேண்டும் என்பதற்காக குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டாா்.