சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம்
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகேயுள்ள மூலக்கரைப்பட்டி பேரூராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன் வழங்கும் முகாம் திங்கள்கிழமை (செப்.29) நடைபெறுகிறது.
இம்முகாமில், சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, அதனுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண், குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வந்து பயன்பெறலாம். மேலும், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, கனரா வங்கி ஆகிய வங்கிகளில் இருந்து வரும் பிரதிநிதிகள் பயனாளிகளிடமிருந்து படிவங்களை பெறுகின்றனா். இதில், வியாபாரிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என பேரூராட்சி செயல் அலுவலா் (பொ) பால்ராஜ் , பேரூராட்சித்தலைவா் பாா்வதிமோகன் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.